வவுனியாவில் மாவீரர் தினத்தை முன்னிட்டு நடாத்த இருந்த களியாட்ட நிகழ்வு நிறுத்தப்பட்டதையடுத்து மீண்டும் அதே இடத்தில் வவுனியா வைரவபுளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டுக்கழக மைதானத்தில் இராணுவத்தினரால் ஆரம்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந் நிகழ்வானது எதிர்வரும் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடாத்துவதற்காக மேடை தாயாரிக்கும் பணியில் இராணுவத்தினர் மிகவும் மும்முரமாக  மேற்கொண்டு வருகின்றனர்.
இராணுவத்தின் களியாட்ட நிகழ்வானது மாவீரர் தினத்திற்கு இரு தினங்களுக்கு முன்னரே மேடை அமைப்பு பணிகளை இராணுவத்தினர் மேற்கொண்டுவந்த நிலையில் அப்பகுதி மக்களின் எதிர்பால் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.