டுவிட்டர் மற்றும் அதன் புதிய தலைமை நிர்வாகி எலோன் மஸ்க் பற்றி விமர்சித்து செய்தி வெளியிட்ட பல முக்கிய ஊடகவியலாளர்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
நியூயோர்க் டைம்ஸ், தி வொஷிங்டன் போஸ்ட், சிஎன்என், வொய்ஸ் ஆஃப் அமெரிக்கா மற்றும் பிற நிறுவனங்களின் ஊடகவியலாளர்களின் டுவிட்டர் கணக்குகள் வியாழன் மாலை முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கணக்குகளை முடக்கியமை தொடர்பாக டுவிட்டர் நிறுவனம்ஊடகவியலாளர்களுக்கு விளக்க மளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் எலோன் மஸ்க் வியாழன் இரவு டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அதில், "அடிப்படையில் படுகொலை ஒருங்கிணைப்புகள்" என விவரித்த அவர் இருக்கும் இடத்தைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்ததாக ஊடகவியலாளர்கள் மீது குற்றம் சுமத்தினார். ஆனால் அவரது அந்தக் கூற்றுக்கு அவர் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என தெரிவித்தார்.
எலோன் மஸ்க் தனது தனிப்பட்ட ஜெட் விமானத்தின் நகர்வுகள் பற்றிய தரவைப் பகிர்ந்து கொண்ட டுவிட்டர் கணக்கை முடக்கியது பற்றி அனைவரும் கட்டுரைகளை வெளியிட்டனர்.
இந்த கட்டுரைகள் ஒவ்வொன்றும் எலோன் மஸ்க் கூறிய "சுதந்திரமான பேச்சு" மற்றும் அவர் தனிப்பட்ட முறையில் விரும்பாத ஒரு கணக்கை தடை செய்வதற்கான அவரது விருப்பத்திற்கு இடையே உள்ள பதற்றத்தை எடுத்துக்காட்டுகிறது.
டுவிட்டருக்கு மாற்றாக உருவான மஸ்டோடன் செயலி (Mastodon) கணக்கையும் டுவிட்டர் முடக்கியது.
"அனைவருக்கும் இருக்கும் அதே டாக்ஸிங் விதிகள் 'ஊடகவியலாளர்களுக்கும்' பொருந்தும்" என மஸ்க் வியாழக்கிழமை பதிவு செய்தார்.
பின்னர் அவர் அதில், "நாள் முழுவதும் என்னை விமர்சிப்பது முற்றிலும் நல்லது, ஆனால் எனது தனிபட்ட இருப்பிடத்தை வெளியிடுவது மற்றும் எனது குடும்பத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துவது நல்லதல்ல." எனவும் தெரிவித்துள்ளார்.
டாக்ஸ்சிங் (Doxxing) என்பது ஒருவரின் அடையாளம், முகவரி அல்லது பிற தனிப்பட்ட விவரங்களை இணையத்தில் வெளியிடுவதைக் குறிக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM