பிரபல வர்த்தகர் கொலை- கிரிக்கெட் வர்ணணையாளரிடம் பொலிஸார் விசாரணை

Published By: Rajeeban

16 Dec, 2022 | 02:57 PM
image

இலங்கையின் பிரபல வர்த்தகர் தினேஸ் சாப்டர் கொலை தொடர்பில் முன்னாள் கிரிக்கெட் வர்ணணையாளர் ஒருவரை விசாரணை செய்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை  முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளை திறந்த மனதுடன் முன்னெடுப்பதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

சாப்டர் இனந்தெரியாத பகுதியொன்றிற்கு தனது வாகனத்தில் சென்றிருக்கலாம் பலரை அல்லது ஒருவரை சந்தித்திருக்கலாம் -இதன் பின்னர் கனத்த மயானத்தின் கார்தரி;ப்பிடத்திற்கு வியாழக்கிழமை மதியம் வந்திருக்கலாம் .

அவரது காரில் வைத்து அன்டெனா வயரினால் அவரது கழுத்து நெரிக்கப்பட்டிருக்கலாம்.

தினேஸ்  நேற்று நபர் ஒருவரை ( பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது)  சந்திப்பதற்காக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார் என விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

எனினும் அந்த நபர் தன்னால் அந்த இடத்திற்கு வரமுடியாது என குறிப்பிட்டுள்ளார், தினேசை தனது வீட்டிற்கு வருமாறு கேட்டுள்ளார் என  விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிகாரி தெரிவித்துள்ளார்.

நாங்கள் திறந்தமனதுடன் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளோம்,பல சாத்தியக்கூறுகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம்,பல கோணங்களில் யார் இதற்கு காரணம் என ஆராய்ந்து வருகின்றோம் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஸ்காப்டரும் அவரது மனைவியும் நேற்று பிரிட்டனிற்கு செல்லதிட்டமிட்டிருந்தனர். 

அவர் தான் மருத்துவர் ஒருவரை பார்ப்பதற்காக செல்வதாக தெரிவித்துள்ளதுடன் தனது கையடக்கதொலைபேசியின் லொகேசனை மனைவியுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அவர் பொரளை மயானத்திற்குள் இருப்பதை அவரது கையடக்க தொலைபேசி  காண்பித்துள்ளது.

எனினும் அவரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியாமல் போனதை தொடர்ந்து மனைவி பொலிஸாரிற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து மயானத்திற்கு சென்ற பொலிஸார் அவர் வாகனத்தில் கைகள் கட்டப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இருப்பதை பார்த்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்துடன் ஒன்றிற்கு மேற்பட்ட நபர் தொடர்புபட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள அதிகாரியொருவர் சிசிடிவியில் பதிவாகியுள்ள விடயங்களை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31