லங்கா பிறீமியர் லீக் கடைசிக் கட்டப் போட்டிகள் கொழும்பில்

Published By: Digital Desk 5

16 Dec, 2022 | 03:20 PM
image

(நெவில் அன்தனி)

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள 3ஆவது லங்கா பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட்டின் முதலாம் சுற்றின் கடைசிக் கட்டப் போட்டிகள் சனிக்கிழமை 17ஆம் திகதியிலிருந்து திங்கட்கிழமை 19ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இந்த மூன்று தினங்களில் தலா 2 போட்டிகள் வீதம் முதல் சுற்றில் எஞ்சியுள்ள 6 போட்டிகள் நடைபெறவுள்ளன.

ஹம்பாந்தோட்டை, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கிலும் கண்டி, பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கிலும் நடைபெற்று  முடிந்த 14 போட்டிகளின் அடிப்படையில் கண்டி பெல்கன்ஸ் 6 போட்டிகளில் 10 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் முதலாம் இடத்திலும் நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸ் 8 புள்ளிகளுடன் 2ஆம் இடத்திலும் இருப்பதுடன் இறுதிச் சுற்றில் விளையாடுவதையும் உறுதி செய்துகொண்டுள்ளன.

6 புள்ளிகளுடன் 3ஆம் இடத்திலுள்ள கலம்போ ஸ்டார்ஸ் அணிக்கு இன்னும் ஒரு வெற்றி கிடைத்தால் அவ்வணியும் இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்றுவிடும்.

கோல் க்ளடியேட்டர்ஸ் 4 புள்ளிகளுடன் 4ஆம் இடத்திலும் தம்புள்ள ஓரா ஒரு வெற்றியைத்தானும் பெறாமல் கடைசி இடத்திலும் இருக்கின்றன.

கண்டி பெல்கன்ஸ் வீரர்கள் முன்னிலை

இந்த சுற்றுப் போட்டியில் துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் கண்டி பெல்கன்ஸ் வீரர்கள் முன்னிலையில் இருக்கின்றனர்.

கண்டி பெல்கன்ஸ் அணியைச் சேர்ந்த அண்ட்ரே ப்ளெச்சர் 6 போட்டிகளில் ஒரு சதத்துடன் 220 ஓட்டங்களை மொத்தமாகப் பெற்று துடுப்பாட்டத்தில் பிராகாசித்துள்ளார். அவர் மாத்திரமே இந்த வருட லங்கா பிறீமியர் லீக் போட்டியில் சதம் குவித்த வீரராவார்.

ஜெவ்னா கிங்ஸ் வீரர் அவிஷ்க பெர்னான்டோ 2 அரைச் சதங்களுடன் 210 போட்டிகளைப் பெற்று 2ஆம் இடத்திலும் இதே அணியைச் சேர்ந்த சதீர சமரவிக்ரம 5 போட்டிகளில் ஒரு அரைச் சதத்துடன் 194 ஓட்டங்களைப் பெற்று 3ஆம் இடத்திலும் உள்ளனர்.

கண்டி பெல்கன்ஸ் வீரர் பெத்தும் நிஸ்ஸன்க (192 ஓட்டங்கள்), கோல் க்ளடியேட்டர்ஸ் அணித் தலைவர் குசல் மெண்டிஸ் (177 ஓட்டங்கள்), கலம்போ ஸ்டார்ஸ் வீரர் தினேஷ் சந்திமால் (167 ஓட்டங்கள்), கண் பெல்கன்ஸ் வீரர் அஷேன் பண்டார (154 ஓட்டங்கள்) ஆகியோரே 150க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றுள்ள மற்றைய துடுப்பாட்டக்காரர்கள் ஆவர்.

பந்துவீச்சில் கண்டி பெல்கன்ஸ் வீரர் கார்லோஸ் ப்றத்வெய்ட் 15 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

நுவன் துஷார (கோல் க்ளடியேட்டர்ஸ்), வனிந்து ஹசரங்க டி சில்வா (கண்டி பெல்கன்ஸ்) ஆகிய இருவரும் தலா 9 விக்கெட்களையும் ஜேம்ஸ் புல்லர் (ஜெவ்னா கிங்ஸ்), விஜயகாந்த் வியாஸ்காந்த் (ஜெவ்னா கிங்ஸ்) ஆகிய இருவரும் தலா 8 விக்கெட்களையும் கைப்பற்றி முறையே 2, 3, 4, 5ஆம் இடங்களில் உள்ளனர்.

இறுதிச் சுற்று

3ஆவது லங்கா பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் அத்தியாயத்தின் இறுதிச் சுற்று டிசம்பர் 21, 22ஆம் திகதிகளிலும் சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி 23ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.

அணிகள் நிலை

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35