கலஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புப்புரஸ்ஸ பகுதியில் இரு குழுக்கள் இடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் கலஹா பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதோடு காயமடைந்த மற்றுமொரு நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக குறித்த நபரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.