எல்லை நிர்ணய அறிக்கையின் படி தேர்தலை நடத்த வேண்டுமெனில் 6 மாதங்கள் கால தாமதமாகும் - எல்லை நிர்ணய குழுவின் தலைவர்

Published By: Digital Desk 3

16 Dec, 2022 | 12:45 PM
image

(இராஜதுரை ஹஷான்)

உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணய அறிக்கைக்கு அமைய தேர்தலை நடத்துவதாக இருந்தால், தேர்தலை இன்னும் ஆறு மாத காலத்திற்கு மேல் பிற்போட நேரிடும்.

தற்போதைய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைக்கு அமைய தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உரிய காலத்தில் தேர்தலை நடத்தலாம்.

அதற்கு எல்லை நிர்ணய குழுவின் பரிந்துரைகள் செல்வாக்கு செலுத்தாது என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

கொழும்பில் வியாழக்கிழமை (15) இரவு இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தொகுதி எல்லை நிர்ணய செயற்பாடுகள் தொடர்பில் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சந்திப்பு எதிர்வரும் 20 ஆம் திகதி நில அளவை திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

எல்லை நிர்ணயம் தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் ஆலோசனை பெற்றுக் கொள்ளப்படும்.

உள்ளூராட்சி மன்றங்களின் தற்போதைய 8800 உறுப்பினர் எண்ணிக்கையை உள்ளூராட்சி மன்றங்களுக்கான தொகுதி எல்லை நிர்ணய அறிக்கைக்கையின் பிரகாரம் 5,100 முதல் 5,200 வரை குறைத்துக் கொள்ள மதிப்பிடப்பட்டுள்ளது.

நிர்ணய அறிக்கை 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும்,அதனை தொடர்ந்து மீளாய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தொகுதி எல்லை நிர்ணய அறிக்கையின் பரிந்துரைகளின் பிரகாரம் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதாக இருந்தால் தேர்தலை இன்னும் ஆறு மாத காலத்திற்கு அதிகமான காலம் பிற்போட நேரிடும். ஏனெனில் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை செயற்படுத்த உரிய காலவகாசம் வேண்டும்.

தற்போதைய உள்ளூராட்சி தேர்தல் முறைக்கு அமைய தேர்தலை உரிய காலத்தில் நடத்த முடியும்.எல்லை நிர்ணய அறிக்கை உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு தடையாக அமையாது என்றார்.

தேர்தல் முறைமை திருத்தம் செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் அறிவித்ததை தொடர்ந்து உள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வதற்காக பிரதமர் தினேஷ் குணவர்தன கடந்த நவம்பர் மாதம் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் நால்வர் அடங்கிய குழுவை நியமித்தார்.

கடந்த நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் நியமிக்கப்பட்ட இந்த குழு எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி குழு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் நகர சபை மற்றும் பிரதேச சபை தேர்தல் சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரின் அதிகாரத்துக்கு அமைய ஏற்கனவே ஒரு வருட காலம் பிற்போடப்பட்டுள்ள உள்ளூராட்சிமன்ற சபைத் தேர்தலை பிற்போடும் நோக்கத்தில் அரசாங்கம் எல்லை நிர்ணய குழுவை நியமித்துள்ளது என பிரதான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன.

அரசியலமைப்பு மற்றும் நாட்டின் பொது கோட்பாடுகளுக்கு அமைய உரிய காலத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களான ஜி.எல் பீரிஸ்,ரஞ்சித் மத்தும பண்டார,தயாசிறி ஜயசேகர,எம்,ஏ சுமந்திரன் மற்றும் அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் கடந்த திங்கட்கிழமை (12ஆம் திகதி )உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:20:41
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 11:22:06
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47