கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூஎல் - 121 என்ற விமானம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

வங்காளவிரிகுடாவில் ஏற்பட்டுள்ள வர்தா சூறாவளி தீவிரமடைந்துள்ளதையடுத்து சென்னையில் கடும் மழை மற்றும் காற்று வீசுவதால் குறித்த விமானம் திருப்பியனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை, டுபாயில் இருந்து சென்னை நோக்கி பயணித்த எமிரேட்ஸுக்கு சொந்தமான விமானமொன்றும் சென்னையில் ஏற்பட்டுள்ள சீரற்றகாலநிலையால் அங்கு தரையிறக்க முடியாமல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.