கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியில்; கொஸ்கம - கட்டுகொட சந்தியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு 3 பேர் காயமடைந்துள்ளனர்.

தனியார் பஸ் ஒன்று பாதையை விட்டு விலகி வீடு மற்றும் விற்பனை நிலையங்கள்  மீது மோதியதை அடுத்தே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில்  கொஸ்கம பிரதேசத்தை 60 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதோடு காயமடைந்த மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.