பதவியிலிருந்து நீக்கப்பட்ட பெரு ஜனாதிபதி பெட்ரோ கஸ்டில்லோவை 18 மாதங்கள் தடுத்துவைக்குமாறு அந்நாட்டு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தைக் கலைத்து அவசரநிலைமையின் கீழ் ஆட்சி செய்வதற்கு பெட்ரோ கஸ்டில்லோ முயன்ற நிலையில், நாடாளுமன்றத்தில் குற்றவியல் பிரேரணை மூலம் அவர் பதவி நீக்கப்பட்டதுடன், உடனடியாக கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் குற்றவியல் பிரேரணையை தவிர்ப்பதற்கு அவர் முயன்றார் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
இந்நிலையில், பெட்ரோ கஸ்டில்லோவை விளக்கமறியலில் வைப்பதற்கு அதிகாரிகள் அனுமதி கோரினர்.
அதையடுத்து 2024 ஜூன் வரை அவரை விளக்கமறியில் வைப்பதற்கு பெரு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது.
பெட்ரோ கஸ்டில்லோ குற்றவாளியாக காணப்பட்டால் அவருக்கு 10 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என அரச வழக்குத் தொடுர் அல்சிடெஸ் டயஸ் கூறியுள்ளார்.
கஸ்டில்லோ பதவிநீக்கப்பட்ட பின்னர் பெருவில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த ஆர்ப்பாட்டங்களின் போது ஏற்பட்ட மோதல்களால் 10 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 340 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM