logo

விஜய் அண்டனி நடிக்கும் 'தமிழரசன்' படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Published By: Digital Desk 5

16 Dec, 2022 | 10:07 AM
image

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் அண்டனி நடிப்பில் தயாராகியிருக்கும் 'தமிழரசன்' படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'தமிழரசன்'. இதில் விஜய் அண்டனி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடித்திருக்கிறார்.

இவருடன் யோகி பாபு, முனிஸ்காந்த், ரோபோ சங்கர், ஒய் ஜி மகேந்திரன், சங்கீதா கிரிஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை எஸ் என் எஸ் மூவிஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். கௌசல்யா ராணி தயாரித்திருக்கிறார்.

இப்படம் தயாராகி பல்வேறு காரணங்களால் வெளியாகாமல் தாமதமாகி கொண்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீடு தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் டிசம்பர் 30ம் திகதியன்று இப்படம் பட மாளிகைகளில் வெளியாகிறது. நீண்ட நாட்கள் கழித்து விஜய் அண்டனி நடிப்பில் திரைப்படம் வெளியாவதால், இந்த திரைப்படம் வெற்றி பெறும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யோகி பாபு நடிக்கும் 'தூக்குதுரை' படத்தின்...

2023-06-09 19:49:07
news-image

பகத் பாசிலின் 'தூமம்' படத்தின் முன்னோட்டம்...

2023-06-09 19:48:44
news-image

நடிகர் ஷபீர் நடிக்கும் 'பர்த்மார்க் '...

2023-06-09 19:48:21
news-image

பான் இந்திய படைப்பாக தயாராகும் 'ஆரா'

2023-06-09 19:45:28
news-image

போர் தொழில்- விமர்சனம்

2023-06-09 19:44:58
news-image

நடிகை ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் 'தருணம்'...

2023-06-08 15:56:59
news-image

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'எல் ஜி...

2023-06-08 15:23:39
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'இறைவன்' படத்தின்...

2023-06-08 15:17:13
news-image

'அஸ்வின்ஸ்' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

2023-06-07 21:33:24
news-image

கிஷோர் நடித்திருக்கும் 'முகை' படத்தின் முன்னோட்டம்...

2023-06-07 21:32:40
news-image

பிரபாஸ் நடிக்கும் 'ஆதிபுருஷ்' படத்தின் பிரத்யேக...

2023-06-07 21:28:34
news-image

பூஜையுடன் தொடங்கிய விக்ரம் பிரபுவின் புதிய...

2023-06-07 21:28:14