நிதி மோசடி குற்றச்சாட்டில் 8 மாதங்களாக சிறையிலடைக்கப்பட்டிருந்த, உலகின் முன்னாள் முதல் நிலை டென்னிஸ் வீரரான போரிஸ் பெக்கர் பிரித்தானிய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தாயகமான ஜேர்மனிக்கு நாடு கடத்தப்படவுள்ளார்.
1985 ஆம் ஆண்டு, 17 வயதில் விம்பிள்டன் ஒற்றையர் சம்பியன் பட்டத்தை வென்று, இப்பட்டத்தை வென்றதன் மூலம், இப்பட்டத்தை வென்ற மிக இளமையான ஆணாக சாதனை போரிஸ் பெக்கர் விளங்குகிறார்.
3 விம்பிள்டன் பட்டங்கள் உட்பட 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், ஒலிம்பிக் தங்கப்பக்கம், 13 மாஸ்ட்டர்; பட்டங்களை வென்றவர் அவர்.
2002 ஆம்ஆண்டு வரிமோசடி குற்றச்சாட்டில் பொரிஸ் பேக்கருக்கு ஜேர்மன் நீதிமன்றம் அவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்திருந்தது.
ஸ்பெய்னிலுள்ள தனது சொத்துகள் மீது பெறப்பட்ட கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், 2017 ஆம் ஆண்டு பிரித்தானிய நீதிமன்றத்தில் அவர் வங்குரோத்து அறிக்கை தாக்கல் செய்தார்.
இதன்போது 2.5 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் பெறுமதியான சொத்துகளை அவர் மறைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கில் போரிஸ் பெக்கருக்கு 30 மாத சிறைத்தண்டனை விதித்து பிரித்தானிய நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது.
அதையடுத்து, லண்டன் வான்ட்ஸ்வோர்த் பகுதியிலுள்ள சிறைச்சாலையில் போரிஸ் பெக்கர் அடைக்கப்பட்டிருந்தார். அவர் தண்டனைக் காலத்தின் அரைப்பகுதியை சிறையில் கழிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், 55 வயதான போரிஸ் பெக்கர், நாடு கடத்தப்படுவதற்காக பிரித்தானிய சிறையிலிருந்து இன்று வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார் என பிரித்தானிய ஊடகங்கள் இன்று (15) தெரிவித்துள்ளன
பிரித்தானிய சிறையில் இடநெருக்கடியை குறைப்பதற்காக, குற்றமிழைத்தவர்களை அவர்களின் சொந்த நாட்டுக்கு நாடு கடத்தும் திட்டத்தின் கீழ் போரிஸ் பெக்கர் விடுவிக்கப்படவுள்ளார் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவர் ஜேர்மனிக்கு நாடு கடத்தப்பட்ட பின்னர் எஞ்சிய சிறைத்தண்டனைக் காலத்தை சிறையில் கழிக்க வேண்டியதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
Photo: AFP
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM