குரு... யோகம் தரும் பார்வை...

Published By: Ponmalar

15 Dec, 2022 | 02:55 PM
image

1.குரு-ஆண் 

2.உருவம்-நீள் சதுரம் 

3.அதிதேவதை- தட்சிணாமூர்த்தி 

4.ஆலயம்-சுவாமிமலை(தந்தைக்கு உபதேசம் செய்த குமரன்). 

5.ஆட்சி வீடு-மீனம் 

6.உச்ச வீடு-கடகம் 

7.நீச்சவீடு-மகரம் 

8.மூலத்திரி கோணவீடு-தனுசு 

9.பகைவீடுகள்-ரிஷபம்,மிதுனம்,துலாம். 

10.காரகன்-புத்திரர், தனம் ஆகியவற்றிற்கு முக்கியமானவர். 

11.திசை-வடக்கு 

12.தானியம்-பச்சைக் கொத்துக்கடலை. 

13.உலோகம்-தங்கம், மஞ்சள் நிற உலோகங்கள் 

14.மலர்-முல்லை. 

15.நவரத்தினம்-புஷ்பராகம். 

16.சமித்து-அரசு. 

17.விலங்கு-யானை. 

18.குலம்-அந்தணன். 

19.மனைவி-தாரை. 

20.சாரம்-புனர்பூசம்,விசாகம், பூரட்டாதி. 

21.கிழமை-வியாழன். இதையும் 

22.நட்பு-சூரியன்,சந்திரன்,செவ்வாய். 

23.பகை-புதன், சந்திரன். 

24.சமம்-சனி,ராகு, கேது. 

25.திசைகாலம்-குருதிசை பதினாறு ஆண்டுகள். குரு ராசியில் ஓர் ஆண்டு தங்கி தன் கடமையைச் செய்கிறார். ராசிச் சக்கரத்தைக் கடக்க பன்னிரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இதையே மகாமகம் அல்லது மாமாங்கம் என்று கூறுகிறார்கள். கோசாரத்தில் 1,3,4,8,10,12, இல்லங்களில் குரு சஞ்சரித்தால் அது தேவதையாகும். 

யோகம் தரும் பார்வை 
குரு இருக்கும் இடம்தான் சங்கடங்களுக்கு ஆளாகுமே தவிர, இவரது பார்வை மிகவும் சக்தி வாய்ந்தது. இவரது பார்வை பல தோஷங்களை அகற்றிவிடும் வல்லமை கொண்டது. குரு 5, 7, 9 பார்வையில் பார்க்கும் இடங்கள் சுபிட்சம் பெறும். 

சமூக அந்தஸ்து, ஆன்மீக ஈடுபாடு, தர்ம காரியங்கள், நற்பணி நிலையங்கள், ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள் அமைத்தல், பள்ளி, கல்லூரிகள் கட்டுதல், வங்கி, அரசு கஜானா போன்ற இடங்களில் வேலை கிடைத்தல் நிதி, நீதித்துறையில் பணிபுரிவது, நீதிபதி, அரசு உயர் பதவிகள் போன்றவற்றை அளிக்கும் வல்லமை உடையவர் குரு பகவான். எந்த லக்னம், ராசியில் பிறந்தாலும் குரு நீச்சம் பெறாமலும் 6, 8, 12-ம் இடத்திலும் 6, 8, 12 ஆகிய அதிபதி களுடன் சேராமல் இருக்க வேண்டும். 

மாசி அபிஷேகம் சிறப்பானது 
நாகதோஷம் நீங்கவும், பயம், குழப்பம் நீங்கவும், திருமணத் தடை நீங்கவும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் விநாயகரை பிரார்த்தனை செய்கின்றனர். குரு பலம் இருப்பவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நீண்டகாலம் நிலைத்திருக்கும். அந்த குரு பகவானுக்கு மாசியில் அபிஷேகம் நடப்பது சிறப்பு. குரு பெயர்ச்சி நாளை விட இந்த நாள் விசேஷ சக்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கௌரவம் - மரியாதை - கொடுத்த...

2024-05-18 18:10:29
news-image

தீராத கஷ்டங்களிலிருந்து நிவாரணம் தரும் எளிய...

2024-05-17 18:24:15
news-image

பதவி உயர்வு பெறுவதற்கான எளிய பரிகாரம்..!?

2024-05-16 17:36:46
news-image

உங்களுடைய ஜாதகத்தை வலிமைப்படுத்தும் பீஜ மந்திரம்..!

2024-05-15 17:33:35
news-image

திருமண தடையை அகற்றும் கோமுக தீர்த்த...

2024-05-14 17:44:12
news-image

வீடு கட்டும் பணியில் ஏற்படும் தாமதத்தை...

2024-05-13 17:22:24
news-image

கேது தோஷத்தை நீக்குவதற்கான எளிய பரிகாரம்..!

2024-05-11 17:13:12
news-image

காரிய சித்தியை அள்ளித்தரும் முருகன் வழிபாடு!

2024-05-11 13:08:41
news-image

அட்சய திருதியை அன்று மகாலட்சுமியை வணங்கி...

2024-05-09 16:39:36
news-image

வெளிநாடு செல்வதற்கு ஏற்படும் தடையை நீக்குவதற்கான...

2024-05-08 19:16:39
news-image

செல்வ வளத்தை உயர்த்திக் கொள்ளவும், பாதுகாத்துக்...

2024-05-07 17:04:12
news-image

நினைத்த காரியத்தை நடத்திக் கொடுக்கும் விநாயகர்...

2024-05-06 18:46:28