ஐ.தே.க.வுடனான கூட்டணி பொதுஜன பெரமுனவிற்கு பாதிப்பாகாது - சாகர காரியவசம்

Published By: Digital Desk 3

15 Dec, 2022 | 02:52 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைந்து கூட்டணியமைப்பதால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

கூட்டணியில் பொதுஜன பெரமுனவிற்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

கூட்டணி தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசியல் நோக்கத்தை விடுத்து பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்து, அவர் தலைமையில் அரசாங்கத்தை ஸ்தாபித்துள்ளோம்.

ஆட்சி கவிழும் போது எதிர்க்கட்சி அரசாங்கத்தை அமைப்பது உலக வழக்கம். ஆனால் சவால்களை பொறுப்பேற்று அரசாங்கத்தை அமைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு பலமுறை அழைப்பு விடுத்தும் அவர் ஆட்சியைப் பொறுப்பேற்கவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்தை பொறுப்பேற்றிருந்தால் அவருடன் ஒன்றிணைந்து அரசாங்கத்தை அமைத்திருப்போம்.

சவால்களை ஏற்க தற்துணிவு இல்லாத எதிர்க்கட்சியினர் விமர்சனங்களை மாத்திரம் முன்வைக்கிறார்கள். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள்வது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

நாட்டுக்காக எத்தரப்பினருடனும் கூட்டணி அமைக்க தயார்.  ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியமைப்பதால் பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

கட்சியின் தனித்துவத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுவோம்.கூட்டணியில் பொதுஜன பெரமுனவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு வலியுறுத்த வேண்டிய தேவை எமக்கு கிடையாது. 

2018 ஆம் ஆண்டு பாரிய சவால்களுக்கு மத்தியில் பொதுஜன பெரமுன 231 உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. எதிர்வரும் ஆண்டு இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17