கழகம் எதிலும் தற்போது இணையாத நிலையிலுள்ள, போர்த்துகல் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஸ்பெய்னின் றியல் மட்றிட் கழகத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் என அக்கழகம் தெரிவித்துள்ளது.
உலகக் கிண்ணப் போட்டிகளில் கால் இறுதியில் மொரோக்கோவிடம் அதிர்ச்சிகரமாக தோல்வியுற்று போர்த்துகல் வெளியேறியது.
அதற்கு முன், இங்கிலாந்தின் மன்செஸ்டர் கழகத்துக்காக விளையாடி வந்த ரொனால்டோ கடந்த மாதம் அக்கழத்திலிருந்து வெளியேறினார்.
இதன்பின் அவர் வேறு கழகம் எதிலும் இணையவில்லை. சவூதி அரேபியாவின் அல் நாசர் கழகத்தில் இணைவதற்கான பேச்சுவார்த்கைள் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும் இதுவரை ஒப்பந்தம் எதுவும் கையெழுத்திப்படவில்லை.
இந்நிலையில், தற்போது ஸ்பெய்னின் மட்றிட் நகரில் தங்கியுள்ள 37 வயதான ரொனால்டோ, றியல் மட்றிட் கழகத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் என அக்கழகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
12 வயதான தனது மூத்த மகனுடன் அக்கழகத்தின் பயிற்சி மைதானத்துக்கு ரொனால்டோ ரொனால்டோ சென்றார். அங்கு இருவரும் தனியாக பயிற்சியில் ஈடுபட்டனர் என செய்தி வெளியாகியுள்ளது.
றியல் மட்ரிட்டுக்காக 2009 முதல் 2018 ஆம் ஆண்டுவரை 9 வருடங்கள் விளையாடிய ரொனால்டோ, அக்கழகத்தின் தலைவர் ஃபுளோரென்டினோவுடன் இன்னும் நெருங்கிய உறவைப் பேணி வருகிறார
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM