சாய்ந்தமருதில் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனைக்கு எதிராக பிரகடனம் நிறைவேற்றம்

Published By: Digital Desk 2

15 Dec, 2022 | 12:12 PM
image

போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை செய்பவர்களின் இல்லத்தில் இடம்பெறும் திருமண, ஜனாஸா கடமைகளுக்கு சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலினால் எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப்பட மாட்டாது என சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலினால் பிரகடனம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது - மாளிகைக்காடு பிரதேசத்தில் தற்போது அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையைத் தடுப்பதற்காக சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் பொறுப்பாளர் சபையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் குறித்து பொறுப்பாளர் சபையின் செயலாளர் ஐ.எல்.எம்.மன்சூரினால் புதன்கிழமை (டிச. 14) வெளியிடப்பட்ட பிரகடன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சாய்ந்தமருது - மாளிகைகாடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் கீழ் நிர்வாகிக்கப்படும் அனைத்து பள்ளிவாசல்களின் ஜமாஅத்தார்களுக்கு விடுக்கப்படும் முக்கியமான அறிவித்தலும் பிரகடனமும் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் பொறுப்பாளர் சபையின் 2022.12.01 ஆம் திகதி நடாத்தப்பட்ட மாதாந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய பின்வரும் விடயங்கள் பிரகடனப்படுத்தப்படுகின்றன.

கடந்த சில மாதங்களாக எமது பகுதிகளில் போதைப் பொருட்களின் பாவனையும் விற்பனையும் அதிகரித்து காணப்படுவதுடன் அதன் விளைவுகளும் மிக மோசமாகக் காணப்படுவதை சாய்ந்தமருது - மாளிகைக்காடு பிரதேச மக்கள் நன்கு அறிவீர்கள். இது சம்பந்தமான பல முறைப்பாடுகள் எமது பள்ளிவாசலுக்கு கிடைத்த வண்ணம் உள்ளன.

இது விடயமாக எமது பள்ளிவாசல் பல துண்டுப் பிரசுரங்களை அவ்வப்போது வெளியீடு செய்துள்ளன. மட்டுமல்லாது, அனைத்துப் பள்ளிவாசல்களிலும் அடிக்கடி இது விடயமாக ஒலிபெருக்கிகள் மூலம் அறிவித்தல்களையும் செய்து வந்துள்ளன. இன்னும் சகல ஜும்ஆப் பள்ளிவாசல்களிலும் இது விடயமாக விசேடமான குத்பா பிரசங்கங்களும் நடத்தப்பட்டன. இருப்பினும், அதன் பெறுபேறுகள் எதுவுமே சாதகமாகவோ அல்லது குறைவடைவதாகவோ தெரியவில்லை. அனைத்தும் பூஜ்ஜியமே!

இதன் காரணமாக சாய்ந்தமருது - மாளிகைக்காடு பிரதேசத்தில் பின்வரும் தீர்மானங்கள் எதிர்வரும் 2023.01.01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பிரகடனப்படுத்தப்படுகின்றன. 

போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் செய்பவர்களின் இல்லங்களில் நடைபெறும் திருமணம், ஜனாஸா கடமைகளுக்கு எமது பள்ளிவாசல்களினால் எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப்பட மாட்டாது, முஸ்லிம் ஜமாஅத்தினர்களின் மையத்துக்கள் அடக்கம் செய்யப்படும் மையவாடிகளில் இவர்களது ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட மாட்டாது. போதைப்பொருளுடன் தொடர்புடையவர்களின் பெயர், விபரங்கள் வீதிகள் தோறும் மற்றும் பள்ளிவாசல்களின் விளம்பரப் பலகைகளிலும் காட்சிப்படுத்தப்படும் போதைப் பொருள் வியாபாரிகள் மற்றும் பாவனையாளர்களின் விபரங்களை உயரதிகாரிகளிடம் தெரியப்படுத்தி, மிக உச்சபட்ச தண்டனை கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும், போதைப் பொருளின் பாவனையாளர் மற்றும் வியாபாரிகளின் மஹல்லா உரிமை ரத்து செய்யப்படும், போதைப் பொருட்களை விற்பனை செய்பவர் வெளியூரைச் சேர்ந்தவர் எனில், உடனடியாக அவர் ஊரை விட்டும் வெளியேற்றப்படுவார்.

எனவே, மேற்படி விடயங்களைக் கருத்தில் கொண்டு மிகவும் பொறுப்புடன் நடந்து, எமது ஊருக்கும் இளம் சந்ததியினருக்கும் பேருதவி செய்யுமாறு அனைவரையும் மிகவும் அன்புடனும் கௌரவத்துடனும் கேட்டுக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஆட்கொண்டுள்ள போதைப்பொருள் பாவனையால் இளம் சிறார்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட யுவதிகளும் அதிகம் பாதிக்கப்படுவதால் இதுபோன்ற பிரகடனங்கள் இன, மதம் பாராது ஒவ்வொரு மத ஸ்தலங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு, சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் நிச்சயம் இளைய சமுதாயத்தைக்  காப்பாற்றலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56