செவ்வாய் கோளில் ஏற்பட்ட தூசிப் புயல் காற்றின் ஒலியை நாசா அனுப்பிய ரோவர் விண்கலம் பதிவு செய்துள்ளது. இது நாசா விஞ்ஞானிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
செவ்வாய் கிரகத்திற்கு ரோவர் என்ற விண்கலத்தை அனுப்பி அங்கு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது நாசா.
இந்த ரோவர் விண்கலம்தான் தற்போது சிவப்பு கோள் என்று அழைக்கப்படும் செவ்வாய் கோளில் (இக்கிரகத்தில் அதிக அளவில் தூசிப் புயல்கள் ஏற்படும்) ஏற்பட்ட தூசிப் புயலின் ஒலியை தனது மைக்ரோபோனில் பதிவுச் செய்து, அதன் ஒலி வடிவத்தை நாசாவுக்கு அனுப்பியுள்ளது.
10 நொடிகள் நீடிக்கும் அந்த தூசிப் புயல் ஒலி வடிவத்தை நாசா வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் தரப்பில் கூறும்போது, “செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை நாம் பார்த்து வந்திருக்கிறோம். இந்த நிலையில், அங்கு நிகழும் தூசிப் புயலின் ஒலியை ரோவர் வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் மெல்லிய வளிமண்டலம், அதிக ஒலி மற்றும் குறைந்த வலிமையான காற்றை உருவாக்குவதால் இந்த ஒலி பூமியில் உள்ள தூசிப் புயல்களை ஒத்ததாகவே உள்ளது. ரோவர் செவ்வாய் கிரகத்தை நல்ல நிலையில் உள்ளது” என்றனர்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான நாசா, செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் பணியை மேற்கொண்டுள்ளது. இதற்காக பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை 2021ஆம் ஆண்டு நாசா அனுப்பியது.
கடந்த 2012ஆம் ஆண்டு க்யூரியாசிட்டி ரோவரை, செவ்வாய் கிரகத்தின் வேறொரு பள்ளத்தில் நாசா தரையிறக்கியது. இந்த நிலையில், பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலம் தற்போது செவ்வாயின் மேற்பரப்பை ஆராய்ச்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM