வடக்கு மாகாணத்தில் அதிபர் ஆசிரியர் இட மாற்றங்களில் அரசியல் நீதியில் தடக்கப்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சேவா சங்கத்தின் யாழ். மாவட்ட செயலாளர் வொல்வின் குற்றச்சாட்டினார்.
இன்றைய தினம் (14) யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள ஜே.வி.பி அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வட மாகாணத்தில் இடமாற்றம் இன்றி பல ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களில் கடமையாற்றி வருகின்றார்கள்.
தற்போதைய நாட்டின் பொருளாளர் நெருக்கடியில் அவர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்ற நிலையில் தொடர்ச்சியாக யாழ். மாவட்டத்தில் இடமாற்றம் பெறாமல் அதிகமான ஆசிரியர்கள் அரசியல் செல்வாக்கினால் தொடர்ந்தும் அதே பாடசாலைகளில் கடமையாற்றி வருகிறார்கள்.
எமது தொழிற்சங்கம் நேற்றைய தினம் புதன்கிழமை வடமாகாண ஆளுநரின் செயலாளரை சந்தித்து பல்வேறு குறைபாடுகள் தொடர்பில் விளக்கிக் கூறியிருக்கிறோம்.
அவரிடம் வடக்கில் ஆசிரியரிடம் ஆட்டம் முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை வெளி மாவட்ட ஆசிரியர்களுக்கான இலவச பேருந்து சேவை நிறுத்தப்பட்டமை தொடர்பில் விசேடமாக கலந்துரையாடியுள்ளோம்.
வடக்கு மாகாணத்தில் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யவிடாமல் சேவையின் தேவை கருதி என்ற வாசகத்தை எழுதி அதிபர்கள் தொடர்ச்சியாக தங்களுக்கு இசைந்த ஆசிரியர்களை பாடசாலையிலே தங்க வைத்துள்ளார்கள்.
இவ்வாறு அவர்கள் தொடர்ச்சியாக தங்குவதால் பாடசாலையில் ஆசிரியர்களுக்கிடையில் முரண்பாட்டு நிலைமைகள் ஏற்படுகின்றது.
இதன் உண்மை நிலையை ஆராய்ந்து பார்த்தால் அதிபர்கள் கூறுவது போன்று சேவையும் இல்லை தேவையும் இல்லை அரசியல் பின்னணியில் இவர்களுடைய இடமாட்டங்களை தடுப்பதற்கான சூழ்ச்சியாகவே உள்ளது.
ஆகவே வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் மாற்றங்கள் உரிய முறையில் இடம் பெற வேண்டும் இல்லையெனில் மாகாணம் தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம் என எச்சரிக்கை விடுத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM