லண்டனில் நடைபெற்ற ‘ஊன்றுகோல்’ நூல் அறிமுக விழா

Published By: Ponmalar

14 Dec, 2022 | 04:12 PM
image

இலக்கியப் படைப்பாளி சுருதி எழுதிய ‘ஊன்றுகோல்’ நாவலின் நூல் அறிமுக விழா கடந்த சனிக்கிழமை லண்டனில் கவிஞர் பாலரதி தலைமையில் நடைபெற்றது.

புலவர் சிவநாதன் ஆசியுரை வழங்கினார். வாணன் வெளியீட்டுரை நிகழ்த்தினார். யோ.பற்றிமாகரன், அருஸ், திருமதி விழியரசி, தமிழவையின் அஞ்சு இராமதாஸ், குணா கவியழகன், க.பாலகிருஷ்ணன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

சுருதி என்ற புனைபெயரைக் கொண்ட சுஜந்தன் காசிலிங்கம் ஓர் அனுபவம் வாய்ந்த மருத்துவ நிபுணராவார். போர்க்காலத்தில் சுஜோ என்ற பெயரில் பொதுமக்களாலும் மற்றவர்களாலும் நன்கறியப்பட்டிருந்தவர்.

வன்னிப் பிரதேச வைத்தியத்துறையில் மிகப் பெரிய பங்காற்றியவர். அறுவைச் சிகிச்சையில் கைதேர்ந்த ஒருவராகப் பலருடைய உயிர்களைக் காப்பாற்றிய சிறப்புடையவர். என்பது குறிப்பிடத்தக்கது.

கவிதை மற்றும் சிறுகதைகள் எழுதிய இவரோர் பரிசுபெற்ற படைப்பாளி. படைப்பாளிகள் மற்றும் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த ‘போர் உலா’ என்ற நாவலின் படைப்பாளி விஜிந்தன் காசிலிங்கம் (கப்டன் மலரவன்) இவரது சகோதரனாவார். அதேபோன்று இவரது தாயார் மலரன்னையும் புகழ்பூத்த இலக்கியப் படைப்பாளியாவார்.

படைப்பிலக்கிய குடும்பப் பின்னணியைக் கொண்ட சுஜந்தன் காசிலிங்கம் (சுஜோ) – சுருதியின் ‘ஊன்றுகோல்’ நாவல் போர்க்கால மக்களின் வாழ்வியலைப் பேசுகின்றது. சாட்சிகலற்ற நிலையில் நடைபெற்ற ஒரு யுத்தத்தின் வலிகளையும் வேதனைகளையும் அடக்குமுறைக்கு உட்பட்ட ஒரு சமூகத்தின் இதய தாகத்தையும் அரசியல் வேட்கையையும் ஓர் ஆவணமாகப் பதிவு செய்திருக்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இறந்த தம் மூதாதையருடன் இயல்பாக பேசும்...

2024-04-17 17:39:35
news-image

வவுனியா, கோதண்டர் நொச்சிக்குளத்தில் நாகர் கால...

2024-04-17 16:16:29
news-image

'குரோதி' வருடப்பிறப்பு - சுப‍ நேரங்கள் 

2024-04-11 14:47:43
news-image

திருக்கோணேஸ்வரத்தில் சாமி தூக்கிய சுற்றுலா பயணிகள்...

2024-04-06 11:06:59
news-image

சித்தி விநாயகர் கும்பாபிஷேகம்

2024-03-28 16:01:41
news-image

நல்லூர் மனோன்மணி அம்மன் ஆலய பங்குனி...

2024-03-19 16:13:26
news-image

ஈழத்து லிங்காஷ்டகம் : மறந்துபோன வரலாறுகள்!...

2024-03-10 13:57:26
news-image

இன்று மகா சிவராத்திரி!  

2024-03-08 11:05:25
news-image

இன்று சர்வதேச தாய்மொழி தினம் 

2024-02-21 12:08:36
news-image

சிவானந்தினி துரைசுவாமி எழுதிய தந்தை -...

2024-02-07 13:18:00
news-image

வாழ்வில் பயத்தை அகற்றும் கம்பகரேஸ்வரர் :...

2024-01-29 17:43:35
news-image

அயோத்தி ராமர் கோவிலை இந்தியப் பிரதமர்...

2024-01-22 15:53:05