கோட்டாபய மனம் வருந்திக் கொண்டிருக்கிறார் - பஷில் ராஜபக்ஷ

Published By: Digital Desk 3

14 Dec, 2022 | 04:32 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டுக்காக அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொண்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று அதை எண்ணி வருந்திக் கொண்டிருக்கின்றார்.

நானும் அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்ய வேண்டும் என்பது மக்களின் தற்போதைய தேவையல்ல என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் தேவை ஏற்படின் இரட்டை குடியுரிமை குறித்த தீர்மானத்தை எடுப்பதற்கு தான் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர் , அரசாங்கத்தில் பொதுஜன பெரமுன பெரும்பான்மை கொண்ட கட்சியாகக் காணப்படுகின்றது என்பதற்காக பொறுப்பு கூற வேண்டிய அவசியமில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அன்று மக்கள் கலவரமடையாமல் சற்று பொறுமையாக இருந்திருந்தால் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு கண்டிருக்க முடியும்.

இன்று ஆர்ப்பாட்டங்கள் இல்லையல்லவா? அதனால் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது? 69 இலட்சம் வாக்குகளால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரினர். அவர் பதவி விலகினார். அது மாத்திரமே இடம்பெற்றுள்ளது.

தற்போதுள்ள அரசாங்கத்தில் பெறும்பான்மை எமது கட்சியிடம் காணப்பட்டாலும் , நாம் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினாலும் நாம் பொறுப்பு கூற வேண்டியவர்கள் இல்லை.

மக்கள் விரும்புபவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே பொதுஜன பெரமுனவின் கொள்கையாகும். மக்களின் விருப்பத்தினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற அடிப்படையிலேயே நாம் வேட்புமனு தாக்கல் செய்கின்றோம். ராஜபக்ஷ குடும்பம் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை மக்கள் விரும்புகின்றனர்.

என்னால் அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொள்ள முடியாது என்ற நிலைமை இல்லை. தேவையேற்படும் போது நான் அதற்கான நடவடிக்கையை எடுப்பேன்.

மக்களின் தேவை அதுவல்ல. தேவைக்கு ஏற்ப செயற்பட நான் தயாராகவே உள்ளேன். குடியுரிமையை நீக்கி மிகச் சிறிய அர்ப்பணிப்பினை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செய்தார். இன்று அதை எண்ணி வருந்திருக் கொண்டிருக்கின்றார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04