பன்முகத்தன்மையை பிரதிபலிப்பதிலிருந்து ஐ.நா. பாதுகாப்பு சபை வெகு தொலைவிலுள்ளது - இந்தியா

Published By: Digital Desk 2

14 Dec, 2022 | 04:21 PM
image

ஐ.நா. சீர்திருத்தம் ஒரு குறிப்பிட்ட காலக்கெடு மற்றும் பாதுகாப்பு சபை  உண்மையான பன்முகத்தன்மையை பிரதிபலிக்காமல் திறந்த நிலையில் விடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள இந்தியா, பயங்கரவாதம், தீவிரவாதம், தொற்றுநோய்கள், அரசு சாரா நாடுகளின் சீர்குலைக்கும் பங்கு போன்ற புதிய உலகளாவிய சவால்கள் மற்றும் தீவிரமான புவிசார் அரசியல் போட்டி அமைதியை உறுதிப்படுத்த வலுவான பலதரப்பு தளத்திற்கான அழைப்பு எனவும் தெரிவித்துள்ளது.

15 நாடுகளைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு சபையில் தற்போதைய தலைமைத்துவத்தில் இந்தியா உள்ளது.  வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தலைமையில்  இன்றும் நாளையும் சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

முதல் நிகழ்வானது, 'சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பராமரித்தல்' என்ற பொருளின் கீழ், 'சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மைக்கான புதிய நோக்குநிலை' குறித்த பாதுகாப்பு சபையில் வெளிப்படையான விவாதங்கள் இடம்பெறும். இந்த தலைப்பில் இந்தியாவின் கருத்துக் குறிப்பு கூட்டத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் ருசிரா காம்போஜ் அதை பாதுகாப்பு சபையின் ஆவணமாக விநியோகிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

உலகம் 77 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல் இல்லை. ஐக்கிய நாடுகள் சபையின் 193 உறுப்பு நாடுகள் உள்ளது.  1945 இல் இருந்த 55 உறுப்பு நாடுகளை விட மூன்று மடங்கு அதிகமாகும். இருப்பினும், பாதுகாப்பு சபையில், உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்து இறுதியாக 1965 இல் கவனத்தில் கொள்ளப்பட்டது. கடந்த ஏழு தசாப்தங்களில் பயங்கரவாதம், தீவிரவாதம், தொற்றுநோய்கள், புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் அச்சுறுத்தல்கள், வளர்ந்து வரும் சமச்சீரற்ற அச்சுறுத்தல்கள், அரசு அல்லாதவர்களின் சீர்குலைக்கும் பாத்திரம் மற்றும் புவிசார் அரசியல் போட்டியை தீவிரப்படுத்துதல் போன்ற புதிய உலகளாவிய சவால்கள் உருவாகியுள்ளன.

இந்தச் சவால்கள் அனைத்தும் ஒரு வலுவான பலதரப்பு பொறுப்புக் கூறலுக்கு  அழைப்பு விடுக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 11:11:08
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41