உல்லாசக் கப்பலிலிருந்து கடலில் வீழ்ந்த யுவதி சடலமாக மீட்பு

Published By: Sethu

14 Dec, 2022 | 11:23 AM
image

அவுஸ்திரேலிய கடற்பரப்பில் உல்லாசக் கப்பலொன்றிலிருந்து வீழ்ந்த யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

பசுபிக் எக்ஸ்புளோரர் (Pacific Explorer) எனும் உல்லாசக் கப்பலில் அவுஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியில் சென்றுகொண்டிருக்கும்போது  நேற்றிரவு பெண்ணொருவர் கடலில் வீழ்ந்தார். 

அவரைக் கண்டுபிடிப்பதற்கு பாரிய தேடுதல்கள் நடத்தப்பட்டன. 

இந்நிலையில், இன்று காலை ஹெலிகொப்டர் ஒன்றின் மூலம் அப்பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

23 வயதான யுவதியொருரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இப்பெண்ணை கண்டுபிடிப்பதற்கு விமானமொன்றும் 2 ஹெலிகொப்டர்களும் இரவு முழுவதும் தேடுதலில் ஈடுபட்டதாகவும், ஜெவ்வா முனைக் கரையிலிருந்து 45 கிலோமீற்றர் தூரத்தில் இன்று காலை 7 மணியளவில் இப்பெண்ணின் சடலம் ஹெலிகொப்டர் ஒன்றினால் கண்டுபிடிக்கப்பட்டு, வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டடதாகவும்,  அவுஸ்திரேலிய கடல்பாதுகாப்பு அதிகாரி சபை தெரிவித்துள்ளது.  

தனது குடும்ப அங்கத்தவர் ஒருவருடன் பயணம் செய்துகொண்டிருந்த பெண்ணொருவர் செவ்வாய் இரவு 11.30 மணியளவில் கடலில் வீழ்ந்தார் என கார்னிவேல் ஒஸ்ட்ரேலியா எனும் கப்பல் நிறுவனம் முன்னர் தெரிவித்திருந்தது. 

இக்கப்பல் மெல்பேர்ன் நகரிலிருந்து கங்காரு தீவை நோக்கி சென்றுகொண்டிருந்தது. மேற்படி சம்பவத்தையடு;தது அக்கப்பல் மீண்டும் மெல்பேர்ன் நோக்கி திரும்பியது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பூர்வீக குடிகளுக்கு நாடாளுமன்றத்தில் குரல் -...

2023-03-26 10:15:44
news-image

கச்சத்தீவில் புத்தர் சிலையா? உடனடியாக அகற்ற...

2023-03-25 15:56:27
news-image

ஜம்மு - காஷ்மீரில் நீர்மின் திறனை...

2023-03-25 15:09:49
news-image

மூன்றாவது குழந்தைக்கு தந்தையானார் மார்க் ஜுக்கர்பெர்க்

2023-03-25 09:52:23
news-image

சீன ஜனாதிபதியின் மொஸ்கோ விஜயம் இந்தியாவுடனான...

2023-03-24 18:06:28
news-image

பிரான்ஸில் ஆர்ப்பாட்டங்களால் 441 பொலிஸார் காயம்,...

2023-03-25 12:43:59
news-image

இந்தியாவில் கார்பன் இருப்பு 79.4 மில்லியன்...

2023-03-24 18:04:45
news-image

இந்திய பாராளுமன்ற உறுப்பினர் பதவிலிருந்து ராகுல்...

2023-03-24 15:11:37
news-image

புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக...

2023-03-24 14:41:04
news-image

கதிர்வீச்சு சுனாமியை ஏற்படுத்தும் ஆயுதத்தை பரிசோதித்ததாக...

2023-03-24 14:36:09
news-image

இந்தோனேஷிய எண்ணெய்க் களஞ்சிய தீயினால் உயிரிழந்தோர்...

2023-03-24 12:50:47
news-image

அமெரிக்கர் கொல்லப்பட்டமைக்கு பதிலடியாக சிரியாவில் அமெரிக்கா...

2023-03-24 11:51:17