காலை நேர உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வோம்

Published By: Ponmalar

14 Dec, 2022 | 10:43 AM
image

சோம்பலை உதறி காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்தால் அது உடலிலும் மனதிலும் புரியும் மாயாஜாலங்கள் என்னென்ன தெரியுமா? மன அழுத்தத்தின் பிடியில் இருந்து விடுபட அதிகாலை உடற்பயிற்சியே அருமையான வழி. 

காலைநேர உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நடைப்பயிற்சி ஆகியவற்றால் மூளையில் உள்ள மகிழ்ச்சியைத் தூண்டும் ஹோர்மோன்களான செரோடோனின், நோர்பினேப்ரைன், எண்டார்பின், டோபமைன் ஆகியவை அதி கரிக்கின்றன. இதனால், நாள் முழுவதும் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது. 

முன்கோபம், படபடப்பு ஆகியவை கட்டுப்படுத்தப்படுகின்றன. உடற்பயிற்சி என்றாலே கடினமான பயிற்சிதான் பலன் தரும் என்று சிலர் கருதுகிறார்கள். கடினமான 'ஜிம்' பயிற்சிகள் செய்யத் தேவை இல்லை.

எளிதான 10 நிமிட 'வோர்ம் அப்' பயிற்சி மூலமாகவே ரத்தத்தில் சர்க்கரை அளவு கணிசமாகக் குறையும். இதய ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் சீராகும். எனவே, ஒரு நாளைக்குக் குறைந்தது 10 முதல் 50 நிமிடங்கள் வரை உடற்பயிற்சியில் ஈடுபடலாம். 

உடற்பயிற்சி செய்வதால், உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் ரத்தத்துக்குப் போதுமான ஒட்சிசன் கிடைக்கிறது. உடற்பயிற்சியானது வாழ்நாளை அதிகரிப்பதோடு, உடல் முதுமை அடைந்து தோல் சுருக்கம் விழுவதைத் தாமதப்படுத்துகிறது.

காலை உடற் பயிற்சி, மூளையின் செயல்திறனுக்கு உதவுகிறது. இதனால், மூளையின் நியூரான்கள் தூண்டப்பட்டு நினைவுத்திறன் மேம்படும்.

50 வயதுக்கு மேற்பட்டவர் களுக்கு நினைவுத்திறன் குறைபாட்டால் அல்சைமர் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முறையான காலை உடற்பயிற்சி மூலம் அல்சைமரின் தாக்கம் குறையும். 

இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் காலைப் பயிற்சி அவசியம். நவீன தொழில்நுட்ப வசதிகளால் இன்று உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்து விட்டது.

இந்நிலையில், உடற்பயிற்சியின் மூலம் உடல் உறுப்புகளுக்கு வேலை கொடுப்பது அவசியம். வெளிப்புறங்களில் பயிற்சியில் ஈடுபட சரியான நேரம் அதிகாலை வேளைதான்.

இரைச்சலும், சுற்றுச் சூழல் மாசுபாடும் குறைந்த அந்நேரத்தில் உடற்பயிற்சி செய்வது, உடலையும் மனதையும் ஒருசேர உற்சாகப்படுத்தும்.

காலையில் தாமதமாக எழுந்து மந்தமாகத் தொடங்குவதைவிட, சூரியன் எழுவதற்கு முன் எழுந்து சுறுசுறுப்பாய் செயல்படத் தொடங்குங்கள். அதன் நற் பலன்களை அனுபவப்பூர்வமாக உணர்வீர்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓடிடிஸ் மீடியா எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2023-05-27 14:02:39
news-image

வலிப்பு நோய்க்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2023-05-26 18:10:38
news-image

கணைய புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2023-05-26 12:25:04
news-image

சொரியாடிக் ஒர்த்தரடிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2023-05-24 15:50:08
news-image

தொடையின் பின்பகுதியில் ஏற்படும் வலிக்கான நிவாரண...

2023-05-23 11:07:06
news-image

கர்ப்பிணிகளுக்கான சுவாசிக்கும் டெக்னிக்ஸ்!

2023-05-20 19:53:27
news-image

சின்னம்மை (Chicken Pox)

2023-05-20 19:55:40
news-image

ஞாபகசக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை

2023-05-20 13:59:49
news-image

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 7...

2023-05-20 14:00:24
news-image

காது… மூக்கு… தொண்டை… பிரச்சினைகள்

2023-05-19 14:36:24
news-image

நடைப்பயிற்சி நல்லது!

2023-05-19 13:00:50
news-image

சிறுநீர் காட்டும் உடல் ஆரோக்கியம்!

2023-05-19 12:43:45