2017 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இறுதிக்கட்ட வாக்கெடுப்பு 110 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரவுசெலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 165 வாக்குகளும் எதிராக 55 வாக்குகளும் பதியப்பட்டுள்ளது.

இதேவேளை வாக்கெடுப்புக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட 4 பாராளுமன்ற உறுப்பினர்கள்  சமுகமளிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த வாக்கெடுப்புக்கு நாமல் ராஜபக்ஷ, மக்கள் விடுதலை முன்னணியினர் மற்றும் கூட்டு எதிர்கட்சியின் உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.