மெஸியின் அற்புத ஆற்றல்களால் குரோஷியாவை வீழ்த்திய ஆர்ஜன்டீனா உலகக் கிண்ண இறுதிக்கு முன்னேறியது

14 Dec, 2022 | 07:05 AM
image

(நெவில் அன்தனி)

குரோஷியாவுக்கு எதிராக லுசெய்ல் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (13) இரவு நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் அணித் தலைவர் லயனல்  மெஸியின் அற்புத ஆட்டத் திறனின் உதவியுடன் 3 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றிபெற்ற ஆர்ஜன்டீனா, 6 ஆவது தடவையாக பீபா உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது.

போட்டியின் முதலாவது பகுதியில் 5 நிமிட இடைவெளியில் 2 கோல்களையும் இடைவெளையின் பின்னர் ஒரு கோலையும் ஆர்ஜன்டீனா புகுத்தியது.

இந்த வெற்றியை அடுத்து உலகக் கிண்ணத்தை வென்றெடுப்பதற்கான கடைசி வாய்ப்பு மெஸிக்கு கிட்டியுள்ளது.

அல் பெய்த் விளையாட்டரங்கில் இன்று நடைபெறவுள்ள நடப்பு சம்பியன் பிரான்ஸுக்கும் மொரோக்கோவுக்கும் இடையிலான 2 ஆவது அரை இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணியை ஞாயிறன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் ஆர்ஜன்டீனா எதிர்த்தாடவுள்ளது.

போட்டியின் ஆரம்பத்தில் தசைப்பிடிப்பினால் அவதிக்கு மத்தியில் விளையாடிய லயனல் மெஸி, பின்னர் எவ்வித பிரச்சினையும் இன்றி திறமையாக விளையாடி 35 ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்டீனாவை முன்னிலையில் இட்டார்.

ஜுலியன் அல்வாரெஸை தனது பெனல்டி எல்லைக்குள் வைத்து குரோஷிய கோல்காப்பாளர் டொமினிக் லிவாகோவிச் முரணான வகையில் வீழ்த்தியதால் ஆர்ஜன்டீனாவுக்கு பெனல்டி வழங்கப்பட்டது.

அந்த பெனல்டியை லயனல் மெசி கோலாக்கி தனது அணியை 1 - 0 என முன்னிலையில் இட்டார்.

5 நிமிடங்கள் கழித்து பந்தை வேகமாக நகர்த்திச் சென்ற அல்வாரெஸ், ஆர்ஜன்டீனா சார்பாக 2 ஆவது கோலலைப் புகுத்தினார்.

அதன் பின்னர் ஆர்ஜன்டீனாவின் இரண்டு முயற்சிகளும் குரோஷியாவின்  இரண்டு முயற்சிகளும் தடுக்கப்பட்டது.

இடைவேளையின் போது ஆர்ஜன்டீனா 2 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தது.

இடைவேளைக்குப் பின்னர் இரண்டு அணிகளும் கோல் போடுவதற்கு கடும் பிரயத்தனம எடுத்துக்கொண்டன. ஆனால் அந்த பிரயத்தனங்களை இரண்டு அணிகளினதும் கோல்காப்பாளர்கள் தடுத்த வண்ணம் இருந்தனர்.

எவ்வாறாயினும் போட்டியின் 69 ஆவது நிமிடத்தில் லயனல் மெஸி பரிமாறிய பந்தை மிக வேகமாக அல்வாரெஸ் கோலினுள் புகுத்த, ஆர்ஜன்டீனாவின் கோல் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

எனினும் தளராமல் விளையாடிய குரோஷியா கோல் போடுவதற்கு பல தடவைகள் முயற்சித்தது. ஆனால், குரோஷியாவுக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை.

இந்தத் தோல்வியுடன் குரோஷிய அணித் தலைவர் லூக்கா மொட்றிச்சின் உலகக் கிண்ண கனவு கலைந்துபோனதுடன் அவரது 16 வருட சர்வதேச கால்பந்தாட்ட வாழ்க்கை பெரும்பாலும் இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ள நேஷன்ஸ் லீக் இறுதிச் சுற்றுடன் நிறைவுக்கு வரவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35