வோல்நட் ப்ரௌனிஸ்

Published By: Devika

13 Dec, 2022 | 04:19 PM
image

தேவையான பொருட்கள் 

 

மைதா - ½ கப்

கொகோ பவுடர் - 1\3 கப்

பேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி

உப்பு - கால் தேக்கரண்டி

முட்டை - 2

சீனி - 1 கப்

பட்டர் \ வெஜிடபிள் ஒயில் - ½ கப்

வெனிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி

வால்நட் - கால் கப்

செய்முறை

 

ஒரு பாத்திரத்தில் பட்டரை உருக்கி எடுத்துக் கொள்ளவும். அதனுடன் சீனி சேர்த்து கரையும் வரை அடித்துக் கொள்ளவும். பின்னர் முட்டைகளை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். இதனுடன் வெனிலா எசன்ஸ் சேர்க்கவும்.

மைதா, கொகோ பவுடர், உப்பு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து இரண்டு அல்லது மூன்று முறை சலித்துக் கொள்ளவும்.

இப்போது மாவுடன் முட்டைக்கலவையை சேர்த்து கட்டியில்லாமல் கலந்துகொள்ளவும்.

இதனுடன் வால்நட் துண்டுகளை சேர்த்து கலந்துகொள்ளவும்.

8x8 இன்ச் ட்ரேயில் பட்டர் தடவி மைதா தூவி வைக்கவும். இதில் தயார் செய்து வைத்துள்ள ப்ரௌனி மாக் கலவையை ஊற்றவும்.

அவணை 350 டிகிரி Fஇல் முற்சூடு செய்யவும். 22 - 25 நிமிடங்களில் ப்ரௌனி வெந்துவிடும். ட்ரேயின் ஓரங்களில் இருந்து ப்ரௌனி சிறிது உள்நோக்கி வந்திருந்தால் ப்ரௌனி தயாரானதை உறுதி செய்து கொள்ளலாம்.

அரை மணி நேரம் ஆற விட்டு ட்ரேயில் கவிழ்த்து வைக்கவும். நன்கு ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறலாம்.

மேலே க்ரிஸ்ப்பியாகவும் உள்ளே மிருதுவான சுவையான ‘வால்நட் ப்ரௌனிஸ்’ தயார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்