இறக்காமம் பிரதேச சபையின் வரவு - செலவுத்திட்டம் தோல்வி

Published By: Vishnu

13 Dec, 2022 | 03:46 PM
image

முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகைக்குட்பட்டிருந்த இறக்காமம் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் தோல்வியடைந்துள்ளது.

இறக்காமம் பிரதேச சபையின்  அமர்வு இன்று (13) தவிசாளர் ஜெமில் காரியப்பர் தலைமையில் இடம்பெற்றபோது  2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது, வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 6 உறுப்பினர்களும், எதிராக 7 உறுப்பினர்களும் வாக்களித்தனர். 

வரவு செலவுத்திட்டத்திற்கு  ஆதரவாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உபதவிசாளர் நௌபர் மௌலவி, அன்வர், பாஹிமா, பொதுஜன பெரமுன கட்சியின் சிறியலதா மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தவிசாளர் ஜெமில் காரியப்பர், நிர்மலா ஆகியோர் வாக்களித்தனர்.

வரவு செலவுத்திட்டத்திற்கு  எதிராக சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் தவிசாளர் கலிலுர் றஹ்மான், றபாய்டீன், சுலைஹா, சுல்பிகார் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ்  கட்சியின் ஆஸிக், நைஸர், முஸ்மி ஆகியோர் எதிர்த்து வாக்களித்தனர்.

இதன் மூலம் இறக்காமம் பிரதேச சபையின் 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோல்வியடைந்தது.

முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  கட்சிகளின் கூட்டில் உள்ள இறக்காமம் பிரதேச சபையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 3 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தமையே வரவு செலவுத்திட்டம் தோல்வியடைந்தமைக்கு முக்கிய காரணமாகும்.

இறக்காமம் பிரதேச சபையில் மொத்தமாக 13 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோட்டார் சைக்கிள் - ஜீப் வாகனம்...

2024-12-11 18:03:42
news-image

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் எம்.பி. ...

2024-12-11 18:02:06
news-image

சுகாதார, வெகுசன ஊடகத்துறை மீதான மக்கள்...

2024-12-11 17:36:54
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட...

2024-12-11 17:44:29
news-image

சீன இராணுவ விஞ்ஞான அகடமி ஆய்வாளர்கள்...

2024-12-11 17:29:18
news-image

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த "பியுமா"...

2024-12-11 17:43:58
news-image

மஹர சிறையில் கொலை செய்யப்பட்ட கைதிகளுக்கு...

2024-12-11 17:41:01
news-image

யால வனப்பகுதியில் கஞ்சா செடிகளுடன் ஒருவர்...

2024-12-11 17:33:20
news-image

பெருந்தோட்டப் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளை அமைப்பது...

2024-12-11 17:49:38
news-image

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்...

2024-12-11 17:30:19
news-image

ஆபாச புகைப்படங்கள், காணொளிகளை சமூக ஊடகங்களில்...

2024-12-11 17:24:44
news-image

நுவரெலியாவில் அதிக விலைக்கு அரிசியை விற்பனை...

2024-12-11 17:13:24