உடற்பயிற்சிக்கும் மனநலனுக்குமான தொடர்பு!

Published By: Devika

13 Dec, 2022 | 03:21 PM
image

வீன தொழில்நுட்ப வளர்ச்சியினால் உடல் உழைப்பு என்பது இன்று பெரு­மள­வில் குறைந்துவிட்டது. வளர்ந்து வரும் தொழில்நுட்பம், மின்னணு சாதனங்கள், புதிய கண்டுபிடிப்புகளால் உடல் செயல்­பாடு குறைந்து வருகிறது. மேலும் உண்­ணும் உணவுப் பொருட்களின் மாறு­பாட்டி­னா­லும் உடலில் நோய்கள் ஏற்­படு­கின்றன.

உதாரணமாக, உண்ணும் உணவாலும் உடல் இயக்கமின்மையால் சாப்பிட்ட உணவு செரிக்காமலும் உடலில் கொழுப்பு­கள் சேர்வதாலும் உடல் பருமன் ஏற்படு­கிறது. அதன் விளைவாக நீரிழிவு, இதய நோய்கள் என்று தொடர்கிறது.

இதனால், உடல்நிலையை சரியாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி செய்ய வேண்­டியதன் அவசியம் தொடர்ந்து வலி­யுறுத்தப்பட்டு வருகிறது. உடற்பயிற்சி செய்வது உடல்நலத்துடன் மனநலத்துக்கும் நல்லது என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.

இந்நிலையில், உடற்பயிற்சி செய்ப­வர்­களுக்கு பதட்டம், மனச்சோர்வு ஏற்படுவது குறைவு என்று ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

எந்தவொரு சூழ்நிலை­யிலும் உடல், மனதை ஆரோக்கியமாக வைத்­துக்கொள்வதன் மூலமாகவே பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் இந்த உடல், மனம் இரண்டையும் ஆரோக்கியமாக வைத்­துக்கொள்ள உடற்பயிற்சி அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் செயல்பாடு மற்றும் இயற்கை­யோடு செலவழிக்கும் நேரம் ஆகியவை மேம்பட்ட மன ஆரோக்கியத்துடன் தொடர்­புடையவை. எனவே, உடல்நலத்துக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கி­றோமோ அந்த அளவுக்கு மனநலனுக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம். இந்த இரண்டும் கிடைக்க நாள் ஒன்றுக்கு அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.

உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் சென்று­தான் உடற்பயிற்சி செய்ய வேண்­டும் என்பதில்லை, மாறாக, வீட்டிலேயோ அல்­லது அருகில் உள்ள பூங்காக்க­ளுக்குச் சென்றோ செய்யலாம். முடிந்த­வரை இயற்கையோடு இணைந்த வாழ்வைப் பெறுங்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04