கருமையான கூந்தலுக்கு…

Published By: Devika

13 Dec, 2022 | 02:49 PM
image

டர்த்தியான கூந்தல் இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால் தற்போது மன அழுத்தம், மாசு, தூசி, கெமிக்கல் நிறைந்த எண்ணெய் மற்றும் ஷெம்பூ பயன்படுத்துவதால் முடி உதிர்வு, இளநரை, வழுக்கை விழுவது போன்றவை அனைவருக்கும் ஒரு பொதுவான பிரச்சினையாக மாறியுள்ளது.

 

ஒலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், செம்பருத்தி இலைகள், நெல்லிக்காய் சாறு, வேம்பு இலைகள் ஆகியவற்றை ஒன்றாக போட்டு நன்கு கலந்து அடுப்பில் வைத்து சூடாக்கவும். நன்கு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து ஆற வைத்து வடிகட்டவும். இப்போது அதை ஒரு போத்தலில் வைத்து தினமும் பயன்படுத்தலாம். இந்த எண்ணெயை தேய்த்து வந்தால் கூந்தல் நன்கு அடர்த்தியாக வளரும்.

ஒலிவ் எண்ணெய் தலைமுடி உதிர்வதைத் தடுத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. குளிர்காலத்தில் தலைமுடியில் வெடிப்புக்கள், வறட்சியை நீக்க ஆமணக்கு எண்ணெய் பயன்படுகிறது. பாதாம் எண்ணெயில் விட்டமின் ஈ நிறைந்திருப்பதால் இது முடி உதிர்வைத் தடுக்கிறது. மேலும் இது ஒரு நல்ல ஆக்சிஜனேற்றியாக இருப்பதால், பாதிப்படைந்த முடிகளை சீர் செய்ய பயன்படுகிறது. செம்பருத்தி இலை முடியை பட்டுப்போன்று மென்மையாக மாற்றிவிடும்.

 நெல்லிக்காயில் உள்ள விட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்கள் போன்ற பண்புகள் கூந்தல் வளர்ச்சியை தூண்டுவதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இது கூந்தல் வளர்ச்சிக்கும் நரைமுடி, கூந்தல் உதிர்தல் போன்ற பிரச்சினைகளுக்கும் தீர்வளிக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right