(எம்.மனோசித்ரா)
தபால் திணைக்களத்தை தனியார் மயப்படுத்த அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.
தபால் ஊழியர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் நியாயமற்றவை. எனவே சம்பளம் அல்லது மேலதிக வேலை நேர கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பான எந்தவொரு கலந்துரையாடலிலும் கலந்து கொள்ள முடியாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
செவ்வாய்கிழமை (13) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் தபால் ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு தொடர்பில் கேட்கப்பட்ட போது அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளம் மற்றும் மேலதிக கொடுப்பனவு என்பவற்றுக்காக 1002 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் இது அரசாங்கத்தினால் தாங்கிக் கொள்ள முடியாத சுமை என்பதால் , அடுத்த ஆண்டு எந்தவொரு அரச உத்தியோகத்தருக்கும் சம்பளத்தை அதிகரிப்பதில்லை என்ற கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் மாதாந்தம் 240 மணித்தியாலங்கள் மேலதிக வேலை செய்வதற்கு அனுமதிக்குமாறு தபால் ஊழியர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நாளொன்றுக்கு 10 மணித்தியாலங்கள் மேலதிக வேலை செய்வதற்கு கோரிக்கை விடுக்கப்படுகிறது. இது எந்த வகையிலும் நியாயமான கோரிக்கை அல்ல.
கடந்த வருடம் தபால் திணைக்களத்திற்கு சம்பளம் மற்றும் மேலதிக வேலை நேர கொடுப்பனவிற்காக 12.8 பில்லியன் செலுத்தப்பட்டுள்ளது. எனினும் வருமானம் 7.1 பில்லியனாகவே காணப்படுகிறது.
100 வீதம் வருமானம் கிடைக்கப் பெறும் போது , 179 சதவீதம் சம்பளத்திற்காக செலவிடப்படுகிறது. இவ்வாறு திணைக்களத்தை தொடர்ந்தும் கொண்டு செல்ல முடியாது. இந்த சுமையை மக்கள் மீது சுமத்த முடியாது.
தபால் கட்டணம் அதிகரிக்கப்பட்டதன் பின்னரும் வருடத்திற்கு 2.4 பில்லியனால் வருமானம் அதிகரித்துள்ளது.
எனினும் இது இலாபத்தை சமாளிப்பது போதுமான வருமானமல்ல. அந்த வகையில் சம்பளம் மற்றும் மேலதிக வேலை நேர கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பிலான எந்தவொரு கலந்துரையாடலிலும் கலந்து கொள்ள முடியாது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாறாக தபால் திணைக்களத்தின் செலவுகளைக் குறைத்து , வருமானத்தை அதிகரிப்பது தொடர்பான கலந்துரையாடல்களில் பங்குபற்றுவதற்கு நாம் தயாராகவே உள்ளோம்.
இதனை தனியார் மயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கவில்லை. நஷ்டத்தில் இயங்கும் திணைக்களத்திற்கு பொறுந்தாத கோரிக்கைகளை முன்வைத்து பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவர்களின் முயற்சிகள் வெற்றியளிக்க இடமளிக்கப்படக் கூடாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM