பங்களாதேஷ் பிரிமியர் லீக் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று டாக்கா டைனமெட்ஸ் அணி 2016 ஆம் ஆண்டுகான கிண்ணத்தை கைப்பற்றியது.

 ஐ.பி.எல் போட்டியினை போன்று பங்களதேஷில் பி.பி.எல் தொடர் இடம்பெற்றுவந்தது.

இந்த தொடரில் பல நாடுகளின் முன்னணி வீரர்கள் விளையாடி வந்தனர்.

இந்நிலையில் இந்த தொடரின் இறுதிப்போட்டி நேற்று இடம்பெற்றது.

இந்த போட்டியில் இலங்கை அணியின் முன்னணி வீரர்களான சங்கக்கார, ஜயவர்தன மற்றும் சீகுகே பிரசன்ன ஆகியோர் விளையாடிய டாக்கா டைனமெட்ஸ் அணி கிண்ணத்தை கைப்பற்றியது.

இறுதிப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி வீரர் டெரன் சமி தலைமையிலான ராஜ்ஷாஹி கிங்ஸ் அணியை எதிர்கொண்ட டாக்கா டைனமெட்ஸ் அணி 56 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய டாக்கா அணி 20 ஓவர்கள் நிறைவில் 159 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

டாக்க அணி சார்பில் லிவிஸ் 45 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், சங்கக்கார தனது அனுபவத்திறமையுடன் 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

160 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ராஜ்ஷாஹி கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் 103 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

இந்நிலையில் போட்டியின் சிறப்பாட்டக்காராக சங்கக்கார தெரிவுசெய்யப்பட்டதுடன், தொடர் ஆட்டநாயகனாக மஹமதுல்ல தெரிவுசெய்யப்பட்டார்.