கல்லீரல் கொழுப்பு நோய் பாதிப்பை குறைக்க முடியுமா..?

Published By: Digital Desk 5

13 Dec, 2022 | 10:10 AM
image

இன்றைய சூழலில் நாற்பது வயதை கடந்த எம்மில் பலரும் இரத்த சர்க்கரையினை அளவிடக்கூடிய பல பரிசோதனைகளை மேற்கொள்ளும் போது, உங்களுக்கு ஃபேட்டி லிவர் எனப்படும் கல்லீரல் கொழுப்பு நோய் பாதிப்பு தொடக்க நிலையில் இருப்பதாக எச்சரிப்பர். உடனே எம்மவர்களும் அச்சம் கொண்டு இது தொடர்பான கூடுதல் தகவலை தெரிந்துகொள்ள இணையத்தை நாடுவார்கள்.

இந்நிலையில் கல்லீரல் கொழுப்பு நோய் பாதிப்பை வராமல் தடுக்க இயலுமா? என்பது குறித்தும், இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால், அதனை குறைக்க எம்மாதிரியான நடவடிக்கை இனி மேற்கொள்ள வேண்டும்? என்பது குறித்தும் காண்போம்.

கொழுப்பு கல்லீரல் நோயைப் பற்றி தெரிந்து கொள்ளும் முன் கல்லீரலை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். நாம் எம்முடைய வாய் வழியாக திட ஆகாரங்களையும், திரவ ஆகாரங்களையும் சாப்பிட்டாலும்.. அவை இரைப்பை, சிறுகுடல்.. ஆகியவற்றின் வழியாக பயணித்து, கல்லீரலை வந்தடையும்.

கல்லீரல் தான், நீங்கள் சாப்பிட்ட உணவில் உள்ள சத்துக்களை பிரித்தெடுத்து, உடல் முழுவதும் அனுப்பும் பணியை மேற்கொள்ளும். இதன் போது கல்லீரலில் தேக்கமடையும் சில மூலக்கூறுகள், கல்லீரலை சேதப்படுத்த தொடங்கும். இந்நிலையில் கல்லீரலில் சேகரமாகும் கொழுப்பு, அங்கு கல்லீரல் கொழுப்பு பாதிப்பாக உருவாகிறது.

கல்லீரல் கொழுப்பு பாதிப்பு ஏற்பட்டவர்களில், 80 சதவீதத்தினருக்கு அவை எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. 10 முதல் 15 சதவீதத்தினருக்கு கல்லீரலில் உள்ள செல்களை இந்த கொழுப்பு தாக்குகிறது. மீதமுள்ள ஐந்து சதவீதத்தினருக்கு கொழுப்பு, கல்லீரலை சேதப்படுத்தி வடுவை உண்டாக்கி, லிவர் சிரோசிஸ் எனப்படும் கல்லீரல் சுருக்க பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் கல்லீரலை செயலிழக்க வைக்கும் சாத்தியக் கூறையும் உண்டாக்குகிறது. 

மது அருந்துவதன் காரணமாகவும், இயல்பான அளவைவிட கூடுதலாகவும், தொடர்ச்சியாகவும் மது அருந்துபவர்களுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இவர்களுக்கு கல்லீரலில் உள்ள ஆரோக்கியமான செல்கள் பாதிக்கப்பட்டு, அங்கு கொழுப்பு இயல்பான அளவை விட கூடுதலாக படிவதால், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய அளவிற்கு ஃபேட்டி லிவர் எனப்படும் கல்லீரல் கொழுப்பு நோய் உண்டாகிறது.

வேறு சிலருக்கு கூடுதல் எடை மற்றும் உடற்பருமன் காரணமாகவும், கட்டுப்படுத்த இயலாத ரத்த சர்க்கரையின் அளவை கொண்டிருப்பவர்களுக்கும், குருதியில் கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு அதிகமாக இருப்பவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம். குறிப்பாக இன்சுலின் எனப்படும் சுரப்பியின் செயல்பாட்டில் சமசீரற்றத்தன்மை இருப்பவர்களுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படும். 

அதே தருணத்தில் ஃபேட்டி லிவர் எனப்படும் கொழுப்பு கல்லீரல் நோயை முழுமையாக குணப்படுத்துவதற்கான மருந்துகள் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனால் இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளை கண்டறிந்து அதனை களைவதற்கான சிகிச்சைகளும், மருந்துகளும் நடைமுறையில் இருக்கிறது.

முதலில் ஃபேட்டி லிவர் எனப்படும் கொழுப்பு கல்லீரல் நோய் வருவதற்கான காரணங்களை கண்டறிந்து அதனை முற்றாக தவிர்க்க வேண்டும். குறிப்பாக மது அருந்துவதை முற்றாக கைவிட வேண்டும். உடல் எடை இயல்பான அளவைவிட கூடுதலாக இருந்தால், அதனை குறைத்து சீராக பராமரிக்க வேண்டும். ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

குருதியில் கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பின் அளவையும் கட்டுப்படுத்த வேண்டும். இன்சுலின் சுரப்பியின் செயல்பாட்டை சமநிலையில் வைத்திருக்க வேண்டும். இதனை பின்பற்ற வேண்டும் என்றால், உங்களது உணவு முறை மற்றும் வாழ்க்கை நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

உணவு முறை என்றவுடன் ஃபேட்டி லிவர் என்ற கல்லீரல் கொழுப்பு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், சர்க்கரையை பயன்படுத்துவதை முழுவதுமாக குறைத்துக் கொள்ள வேண்டும். பழங்களை சாறு பிழிந்து அருந்துவதை விட, நேரடியாக சாப்பிட வேண்டும். ஏனெனில் பழச்சாறில் பிரக்டோஸ் எனும் சர்க்கரையின் மூலக்கூறு உருவாவதால் கல்லீரலில் கொழுப்பு சேரக்கூடும்.

பிரெட், பாண், சொக்லேட், பிஸ்கற்று.. என பதப்படுத்தப்பட்ட கொர்போஹைட்ரேட் சத்துக்கொண்ட உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். ஃபேட்டி லிவர் எனப்படும் கல்லீரல் கொழுப்பு நோய் பாதிப்பின் மூன்றாம் நிலை, நான்காம் நிலை என பரிசோதனை மூலம் வகைப்படுத்தப்பட்டவர்கள்.., மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் குறைவான கொர்போஹைட்ரேட் சத்துக் கொண்ட உணவு முறையை கடைப்பிடிக்கலாம்.

மேலும் இதனுடன் நாளாந்தம் 30 முதல் 45 நிமிடம் வரை உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதன் போது கல்லீரலில் உள்ள கொழுப்புகள் கரைவதற்கான சூழல் உருவாகிறது.

டொக்டர் கார்த்திகேயன்
தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29
news-image

ஒஸ்பெர்ஜர்'ஸ் சிண்ட்ரோம் எனும் குழந்தைகளுக்கான வளர்ச்சி...

2024-04-04 14:17:36
news-image

அதிரோஸ்கிளிரோசிஸ் எனும் ரத்த நாளத் தடிப்பு...

2024-04-03 16:12:32