மனித உரிமை தினத்தை முன்னிட்டு இன்று சங்கிலிப் பேரணி ஒன்று மட்டக்களப்பில் இடம்பெறுள்ளது.

மட்டக்களப்பு திருமலை வீதியில் உள்ள  தாண்டவன் வெளியில் இருந்து ஆரம்பித்த இந்த பேரணி மட்டக்களப்பு காந்தி பூங்கா வரைக்கும் நடைபவனியாக சென்றடைந்தது.

இதனை தொடர்ந்து 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தும்  காணாமல் போனவர்களுக்கு நீதி வேண்டியும்  மகஜர்கள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.