அவுஸ்திரேலியாவில் பொலிஸாரை குறிவைத்து தாக்குதல்; 6 பேர் பலி

Published By: Digital Desk 2

13 Dec, 2022 | 09:53 AM
image

அவுஸ்திரேலியாவில் காணாமல் போன நபரை தேடி சென்ற பொலிஸாரை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணம் விம்பிலா நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன் காணாமல்போன நபர் ஒரு பண்ணை வீட்டில் இருப்பதாக பொலிஸாருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, அந்த பண்ணை வீட்டிற்கு நேற்று திங்கட்கிழமை (டிச.12) மாலை 5 மணியளவில் பொலிஸார் சென்றுள்னர். அப்போது, அந்த வீட்டிற்குள் இருந்த 3 பேர் கொண்ட கும்பல் பொலிஸார் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலையடுத்து, பொலிஸார்  பதில் தாக்குதல் நடத்தியதுடன் கூடுதல் பொலிஸாரை அனுப்பும்படி தகவல் கொடுத்துள்ளனர்.

பண்ணை வீட்டில் இருந்த பெண் உட்பட 3 பேர் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியதில் பொலிஸ் அதிகாரிகள் ரஷெல் மெக்கிரவ்ன் மற்றும் மேத்திவ் அர்னால்டு ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சத்தம் கேட்டு அருகில் வசித்து வந்த நபர் அந்த பண்ணை வீட்டிற்கு ஓடி சென்றுள்ளார். அப்போது, அந்த நபர் மீதும் அந்த கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இதில், அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனை தொடர்ந்து அங்கு கூடுதல் பொலிஸார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து இருதரப்பு இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. 6 மணி நேரம் நடந்த இந்த மோதலில் பொலிஸார்  மீது தாக்குதல் நடத்திய பெண் உட்பட 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

இதனால், இந்த மோதலில் 2 பொலிஸார், ஒரு பொதுமக்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சில பொலிஸாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

பொலிஸார்  மீது தாக்குதல் நடத்தியது யார்? தாக்குதலுக்கான காரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பூர்வீக குடிகளுக்கு நாடாளுமன்றத்தில் குரல் -...

2023-03-26 10:15:44
news-image

கச்சத்தீவில் புத்தர் சிலையா? உடனடியாக அகற்ற...

2023-03-25 15:56:27
news-image

ஜம்மு - காஷ்மீரில் நீர்மின் திறனை...

2023-03-25 15:09:49
news-image

மூன்றாவது குழந்தைக்கு தந்தையானார் மார்க் ஜுக்கர்பெர்க்

2023-03-25 09:52:23
news-image

சீன ஜனாதிபதியின் மொஸ்கோ விஜயம் இந்தியாவுடனான...

2023-03-24 18:06:28
news-image

பிரான்ஸில் ஆர்ப்பாட்டங்களால் 441 பொலிஸார் காயம்,...

2023-03-25 12:43:59
news-image

இந்தியாவில் கார்பன் இருப்பு 79.4 மில்லியன்...

2023-03-24 18:04:45
news-image

இந்திய பாராளுமன்ற உறுப்பினர் பதவிலிருந்து ராகுல்...

2023-03-24 15:11:37
news-image

புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக...

2023-03-24 14:41:04
news-image

கதிர்வீச்சு சுனாமியை ஏற்படுத்தும் ஆயுதத்தை பரிசோதித்ததாக...

2023-03-24 14:36:09
news-image

இந்தோனேஷிய எண்ணெய்க் களஞ்சிய தீயினால் உயிரிழந்தோர்...

2023-03-24 12:50:47
news-image

அமெரிக்கர் கொல்லப்பட்டமைக்கு பதிலடியாக சிரியாவில் அமெரிக்கா...

2023-03-24 11:51:17