(இராஜதுரை ஹஷான்)
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காக கொண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சியை ஒன்றிணைத்து பலமான கூட்டணி ஒன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
கூட்டணி அடிப்படையில் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிடுவோம் என அரசாங்கத்தில் ஒரு தரப்பினரும், கட்சி என்ற ரீதியில் தனித்து போட்டியிடுவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு தரப்பினரும் குறிப்பிட்டுள்ளார்கள்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்,செயற்பாட்டு ரீதியான அரசியல் நிலைவரம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் கடந்த வாரம் நெலும் மாவத்தையில் உள்ள பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் விசேட பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் பிரதமர் தினேஷ் குணவர்தன உட்பட கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த போது ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரசாங்கத்தை ஸ்தாபிக்க அரசியல் ரீதியில் எடுத்த தீர்மானம் சிறந்தது என கட்சியின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காக கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சியை ஒன்றிணைத்து கூட்டணி ஒன்றை ஸ்தாபிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
கூட்டணியாக போட்டியிடலாம் என ஒரு தரப்பினர் குறிப்பிட்டுள்ள நிலையில்,பொதுஜன பெரமுனவின் அடையாளங்களை முன்னிலைப்படுத்தி தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என பொதுஜன பெரமுனவின் ஒரு சில உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்,இருப்பினும் இவ்விடயம் தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் இருந்து விலகியுள்ளதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத நிலை காணப்படுகிறது, அரசியல்வாதிகளுக்கும்,மக்களுக்கும் இடையில் நல்ல இணக்கப்பாடு கிடையாது, ஆகவே எதிர்வரும் மாதம் முதல் நாடளாவிய ரீதியில் கட்சி கூட்டங்களை நடத்தும் நடவடிக்கையை முன்னெடுக்குமாறு பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ கட்சியின் உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM