உலக புலம்பெயர்வு மற்றும் மனித உரிமைகள் நினைவு தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு பேரணி ஹட்டன் நகரில் இன்று நடைபெற்றது.

 நீதி, சமாதானம் மனித அபிவிருத்தி உரிமைகள் பற்றிய ஆணைக்குழு, கரிட்டாஸ் கண்டி செட்டிக் நிறுவனத்தின் ஏற்பாட்டில்  குறித்த அமைதி ஊர்வலம் இடம்பெற்றது.

ஹட்டன் பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று மணிக்கூண்டு சந்தியூடாக ஹட்டன் பிரதான வீதியில் அஜந்தா விடுதிவரை சென்று விழிப்புணர்வு கூட்டம் இடம்பெற்றது.

 பேரணியில்  செட்டிக் நிறுவன  இயக்குனர்  அருட்தந்தை டெஸ்பன் பெரேரா, நுவரெலியா மாவட்ட இணைப்பாளர்  அருட்தந்தை லெஸ்லிபெரேரா  மற்றும்   அருட்தந்தை மாக்கஸ் கொடிபிலி உட்பட பெண்கள் சிறுவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 சிறுவர் மற்றும் பெண்கள் துஸ்பிரயோகம் பாலியல் ரீதியான உளரீதியான, பொருளதார ரீதியான, உடல் ரீதியான வன்முறைகளை இல்லாதொழிப்போம் என பதாதைகள் ஏந்தியவாறு குறித்த பேரணி இடம்பெற்றது.