நாணய நிதியத்திடமிருந்து கடனுதவியைப் பெறக்கூடிய எவ்வித சாதகமான சமிக்ஞையும் இதுவரை தென்படவில்லை - திஸ்ஸ அத்தனாயக்க

Published By: Digital Desk 5

12 Dec, 2022 | 05:29 PM
image

(எம்.மனோசித்ரா)

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியைப் இம்மாத இறுதியில் பெற்றுக் கொள்ள முடியும் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது.

எனினும் இதுவரையில் அதற்கான எவ்வித சாதகமான சமிக்ஞையும் தென்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த நாம் தயாராகவுள்ளோம் என்ற செய்தியை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளோம். எமது மாநாட்டில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைக் கொண்டு , அவர்கள் எந்த மாற்றத்தை விரும்புகின்றனர் என்பது தெளிவாகத் தெரிந்திருக்கும்.

கடந்த வாரம் பிட்ச் ரேட்டிங் நிறுவனத்தினால் இலங்கை மீண்டும் தரமிறக்கப்பட்டுள்ளது. இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது என்பதை உலகிற்கு மீண்டும் உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்த தரப்படுத்தல் அமைந்துள்ளது. 

எனினும் இந்த நிலைமையிலிருந்து நாட்டை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.

இம்மாத இறுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது. 

எனினும் இதுவரையில் அதற்கான எவ்வித சாதகமான சமிஞ்ஞையும் தென்படவில்லை. இதற்காக அரசாங்கம் முன்னெடுத்த முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை.

பொருளாதார மறுசீரமைப்பில் அரசாங்கத்தின் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கு பதிலாக , இலாபமீட்டும் நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் பொறுத்தமற்றது. 

இலாபமீட்டும் நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதற்கு பதிலாக அரச - தனியார் கூட்டு முயற்சியில் நஷ்டமடையும் நிறுவனங்களை மறுசீரமைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சனல் 4 தொலைக்காட்சியிடம் ராஜபக்ஷர்கள் நஷ்டஈடு...

2023-09-27 15:54:32
news-image

பாணந்துறை ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சை...

2023-09-27 17:34:31
news-image

2048 - பசுமைப் பொருளாதார வேலைத்திட்டத்திற்குத்...

2023-09-27 16:19:07
news-image

வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு பிரான்ஸ் பூரண ஆதரவை...

2023-09-27 21:50:31
news-image

முள்ளிவாய்க்காலில் புலிகளின் பொருட்களைத்தேடி 3 ஆவது...

2023-09-27 17:31:08
news-image

இலங்கை திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற தவறிவிட்டது...

2023-09-27 18:01:44
news-image

பயணச்சீட்டின்றி ரயிலில் பயணிப்பவர்களிடம் சோதனை நடவடிக்கையை...

2023-09-27 17:47:28
news-image

பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்...

2023-09-27 21:51:17
news-image

கட்டாரிலிருந்து வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்திய நபர்...

2023-09-27 21:53:11
news-image

யாழ். சுன்னாகத்தில் வீடு புகுந்து 13...

2023-09-27 17:18:30
news-image

இராஜாங்க அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக நியமனம்

2023-09-27 16:51:12
news-image

மருதங்கேணியில் சட்டவிரோத மண் அகழ்வை தடுக்க...

2023-09-27 22:00:47