இரண்டு வெவ்வேறு பகுதிகளில் ஹெரொயின் போதைப்பொருள் வைத்திருந்த பெண்கள் இருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

இதன்படி பொரளை பகுதியில் 15 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை மாளிகாவத்தை பகுதியில் 3 கிராம் ஹெரொயின்  போதைப்பொருளுடன் மற்றுமொரு பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.