இனப்பிரச்சனைக்கான தீர்வு பேச்சுவார்த்தையில் முஸ்லீம்கள் தனித்தரப்பாக கலந்துகொள்ள வேண்டும் - அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் கோரிக்கை

Published By: Digital Desk 3

12 Dec, 2022 | 02:17 PM
image

ஜனாதிபதி  பாராளுமன்றத்தில்   வரவு செலவு திட்ட இறுதி வாக்கெடுப்பின்  பின்னர் ஆளும் கட்சி மற்றும்  எதிர்க்கட்சிகளின் அனுசரணையுடன் எதிர்வரும்  சுதந்திர தினத்திற்கு முன்னர் நாட்டில் நிலவிவரும்  இனப்பிரச்சனைக்கு நிரந்தர  தீர்வினைப்  பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். 

இதனைத்தொடர்ந்து தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இணைந்த வடகிழக்கிற்குள் சமஷ்டி தீர்வினைபற்றி பேசிக்கொண்டிருக்கும்  இவ்வேளையில் ஜனாதிபதியினால்  சகல தமிழ் தரப்பினை   சந்தித்து பேசுவதற்கான  அழைப்பும் விடுக்கப்பட்டிருகின்றது . 

ஆனால்  இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம் மக்களுக்கான தீர்வு தொடர்பில் பேசுவதற்கு  முஸ்லிம் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாமை  எங்கள் மத்தியில் பலதரப்பட்ட சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்  கடந்தகாலங்களில்  நடைபெற்ற இலங்கை இந்திய ஒப்பந்தம் முதல் ஒஸ்லோ மாநாடுவரையிலான இனத்தீர்வுக்கான  பேச்சுவார்த்தைகளில்  முஸ்லிம் தரப்பு புறக்கணிக்கப்பட்டிருந்தமையே இன்றுவரையில் இனப்பிரச்சினை புரையோடிப்போவதற்கு காராணம் என்பதனையும் உரிய தரப்புக்கள் புரிந்துகொள்ள வேண்டும் 

இதனைக்  கருத்தில் கொண்டு அம்பாறை மாவாட்ட பள்ளிவாசல்களின் சம்மேளனம் தலைவர் வைத்தியர் எஸ்.எம்.ஏ அஸீஸ்  தலைமையில் ஞாயிற்றுக்கிழமை  (11) நிந்தவூர்  ஜும்ஆ பள்ளிவாசலின் கேட்போர் கூடத்தில் கூடி கலந்துரையாடியதோடு பின்வரும் தீர்மானங்களை   மேற்கொண்டது. 

01) எல்லோருக்கும் பொதுவான ஜனாதிபதி  நாட்டிலே நிலவுகின்ற இனப்பிரச்சினைக்கு  தீர்வு வழங்க முயற்சிக்கும் இவ்வேளையில் தொடர்ச்சியாக இனரீதியிலான நெருக்குதலை  எதிர்நோக்கிக்கொண்டிருக்கும்  முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளையும் பேச்சுவார்த்தையின்போது    தனித்தரப்பாக கலந்துகொள்ள  அழைப்பு விடுக்கவேண்டும் என்பதோடு எல்லா  சமூகங்களும்  நிம்மதியாக வாழுகின்ற  சூழலை உருவாக்கும் தீர்வு திட்டத்தினை முன்மொழிய வேண்டும்.

02) முஸ்லிம் சமூகத்துக்கான தீர்வுத்திட்ட முன்மொழிவுகளை மேலும் ஆய்வு செய்திட  நிபுணத்துவ ஆலோசனைக்குழு ஒன்றினை அமைப்பது எனவும் 

03) கிழக்கு மாகாணத்தின்  ஏனைய  மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் காணப்படும் பள்ளிவாசகளின் சம்மேளனம் மற்றும் ஜம்இய்யதுல் உலமா சபையோடும்  இணைந்து அங்கு காணப்படும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கான தீர்வினையும் பெற்றிட அனைத்து மாவட்டங்களையும் அடக்கிய ஓர்  அமைப்பாக இணைந்து செயற்படல் எனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது 

மேலும் இக்கூட்டத்துக்கு சம்மேளன செயலாளர் ஏ.எல். அன்வர்டீன் பொருளாளர் எஸ்.எம்  சபீஸ்இஉறுப்பினர்கள்இஉலமாக்கள்  மற்றும் புத்திஜீவிகள்  கலந்துகொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58