சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் சில்வாவுக்கு பிரதி பொலிஸ்மாதிபராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கப்பலொன்றிலிருந்து 800 கிலோகிராம் நிறையுடைய 1200 கோடி ரூபா பெறுமதியான கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

குறித்த கொக்கைன் தொகையானது சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் சில்வாவின் தலைமையில் கைப்பற்றப்பட்டமையால் அவருக்கு குறித்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.