பரிகாரங்கள் பலன் அளிக்குமா? அளிக்காதா?

Published By: Ponmalar

12 Dec, 2022 | 12:46 PM
image

இன்றைய சூழலில் எம்மில் பலரும் பரிகாரங்கள் என்ற பெயரில், வாழ்வியல் பரிகாரங்கள், தாந்த்ரீக பரிகாரங்கள், ஆலய பரிகாரங்கள், ஆன்மீக பரிகாரங்கள், ஜோதிட பரிகாரங்கள், வாஸ்து பரிகாரங்கள், சூட்சும பரிகாரங்கள்.. என பலவகையினதான பரிகாரங்கள் மேற்கொள்கிறார்கள். இவர்களில் பலரும் நாங்கள் பரிகாரங்களை செய்கிறோம். ஆனால் பலன்கள் எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்கவில்லை என்று சொல்பவர்களே அதிகமாக இருக்கிறார்கள். இந்நிலையில் உண்மையிலேயே பரிகாரங்கள் பலன் அளிக்கிறதா? இல்லையா? என்பதை தொடர்ந்து வாசித்து அறிவோம். 

வரலாற்றில் மக்களை ஆண்ட மன்னர்கள் ஜோதிடத்தை அறிந்து கொண்டு, ஆட்சி நடத்தினார்கள். அதன் பிறகு தற்போது மக்களாட்சி நடைபெறுகிறது. இதன் காரணமாக மக்களாகிய நாம் ஜோதிடத்தை அறிந்து கொண்டு, நாம் நமது வாழ்க்கையை நடத்த தீர்மானிக்கிறோம். நாம் ஏன் ஜோதிடம் பார்க்கிறோம்? 

முப்பது வயதாகியும் எங்கள் மகளுக்கு திருமணமாகவில்லை... 

திருமணமாகி பத்து ஆண்டுகளாகியும் எங்களுக்கு குழந்தை பேறு கிட்டவில்லை... 

நான் உயர்கல்வி கற்கவில்லை. இதனால் எனக்கு கிடைக்க வேண்டிய பணி கிடைக்கவில்லை. எனது எதிர்காலம் என்னவாகும்?... 

எனது பெற்றோர் வழியாக வந்த பூர்வீக சொத்து எனக்கு கிடைக்கவில்லை. அதனை அனுபவிக்கும் பாக்கியமும் இல்லை. எனக்கு பூர்வீக சொத்து கிடைக்குமா?... 

கடன் கழுத்தை நெறிக்கும் அளவிற்கு உயர்ந்து கொண்டே இருக்கிறது இதிலிருந்து எப்படி விடுதலையாவது என்று வழி தெரியவில்லை... 

எனக்கு அடிக்கடி சுகவீனம் ஏற்படுகிறது. எத்தனை முறை வைத்தியரையும், வைத்தியச் சாலைக்கும் சென்று சிகிச்சைப் பெற்று வந்தாலும் மீண்டும் மீண்டும் நோயானது தொடர்கதையாகவே இருக்கிறது. 

எனது ஆயுள் ஆரோக்கியமாக இருக்கிறதா? ஆயுள் நீடிக்குமா?... அகால மரணம் ஏற்படுமா?... 

நான் கடினமாக உழைத்து நற்பெயரை ஈட்டுவேனா?.. திறமையும், விடாமுயற்சியும் இருக்கிறது. புகழ் பெறுவேனா?... 

நான் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெறுவேனா?... 

சொந்தமாக தொழில் தொடங்கி வெற்றி பெறுவேனா? அல்லது தொழில் தொடங்கி லாபம் கிட்டாமல் நட்டம் அடையுமா?... இதையெல்லாம் கடந்து நாளாந்தம் இரவில் எந்தவித சிக்கலும் இல்லாமல் நிம்மதியாக உறக்கம் வருமா... 

இப்படியான பல வினாக்கள் எம்மிடம் உள்ளன. விடை தெரியாத இது போன்ற வினாக்களுக்கு விடை காண்பதற்காகவும்,  துயரத்தில் இருக்கும் எமக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும்? என்பதை அறிந்து கொள்வதற்கும் ஜோதிடத்தை நம்பி ஜோதிடர்களை அணுகுகிறோம்.

ஜோதிடர்கள் எம்முடைய ஜாதகம், பிரசன்னம் உள்ளிட்டவற்றை துல்லியமாக அவதானித்து, நாம் மனதில் கேட்க எண்ணிய வினாக்களை அவர்களாகவே அவதானித்து விடையளிக்கிறார்கள். அதனுடன் எம்மை பிடித்திருக்கும் தோஷம் என்ன? அதிலிருந்து விலகுவதற்கு மேற்கொள்ள வேண்டிய பரிகாரம் என்ன? என்பது குறித்தும்,  எமக்கு கிடைக்கவிருக்கும் யோகம் என்ன? அதற்கான பரிகாரம் என்ன? என்பது குறித்தும் பதிலளிக்கிறார்கள்.

உங்களுக்கான ஜோதிட கட்டங்கள் என்பது, உங்களுடைய கடந்தக்கால ஜென்மங்களின் கர்ம வினை பதிவு என்பதனை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள். இதனை ஜோதிட விதிகளின் படி பரிகாரம் சொல்வது என்பது, அனுபவமற்ற... குருவின் ஆசி முழுமையாக பெறாத ஜோதிடர்களின் கூற்றாகும். ஆனால் பல தசாப்த அனுபவமும், குரு, மகான் ஆகியோர்களின் ஆசியையும் பெற்ற ஜோதிடர்கள், அருள் வாக்கு வகையில், சில நுட்பமான பரிகாரங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துவார்கள்.

இதற்கு எம்மில் பலரும், பரிகாரம் செய்வதால் உடனடியாக பலன் கிடைக்குமா? என்பதுதான் அடுத்த வினாவாக இருக்கிறது. இதற்கு விடையளிக்கும் ஜோதிடர்கள், சூழல் கருதியும், ஜாதகர்களின் மனதில் நம்பிக்கையை விதைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், ‘உடனடியாக பலன் கிடைக்கும்’ என, நோய்க்கு நிவாரணம் வழங்குவது எப்படி வைத்தியர்களுக்கு முதன்மையானதோ.. அந்த வகையில் இந்த வார்த்தையை ஜோதிடர்களும் பயன்படுத்துகிறார்கள்.

முதலில் பரிகாரங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். உங்களுடைய ஜாதகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் தோஷங்களை களைவதற்கான பரிகாரங்கள் முதல் வகையாகவும், உங்களுடைய ஜாதகத்தில் உங்களுக்கு உரிய யோகங்களை பெறுவதற்கான பரிகாரங்களை இரண்டாவது வகையாகவும் பிரித்துக் கொள்ள வேண்டும். தோஷங்களை களைவதில் அதிக அக்கறையும், யோகத்தை பெறுவதில் அதீத அக்கறையும் செலுத்த வேண்டும். இந்த இரண்டையும் ஏக காலத்தில் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். உதாரணத்திற்கு திங்கட்கிழமை காலையில் தோஷத்திற்கான பரிகாரமும், அன்று மாலையே யோகத்திற்கான பரிகாரமும் செய்வதை தவிர்க்க வேண்டும்.

ஜோதிடர்களிடம் எதனை முதலில் மேற்கொள்ள வேண்டும்? என்பதனை தெளிவாக கேட்டு, அதனை முழு மனதுடன் செய்தால், அதற்கான பலன்கள் கிடைக்க தொடங்கும். உங்களுடைய ஜாதகத்தில் தோஷங்கள் வீரியமாக இருந்தால், அதற்கான பலன்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். அதே தருணத்தில் தோஷங்களை களைவதற்கு ஜோதிடர்கள் வலியுறுத்தும் அனைத்து விடயங்களையும் கவனமுடன் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். அதேபோல் யோகங்கள் கிடைப்பதற்கும் ஜோதிடர்கள் வலியுறுத்தும் அனைத்து வகையான பரிகாரங்களையும் மேற்கொள்ள வேண்டும்.

அதே தருணத்தில் நீங்கள் மேற்கொள்ளும் பரிகாரங்கள் துல்லியமாக பலனளிக்க வேண்டும் என்றால், ஜோதிடர்கள் வலியுறுத்தினாலும், வலியுறுத்தாவிட்டாலும் ‘அன்னதானம்’ செய்வதை தொடர்ச்சியாக வாழ்நாள் முழுவதும், உங்கள் சக்திக்கு ஏற்ற அளவில் பின்பற்ற வேண்டும். இவை நீங்கள் மேற்கொள்ளும் பரிகாரங்கள், பலனளிப்பதற்கான தூண்டுகோல் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுறை பாவங்களை நீக்கும் மந்திர உச்சாடன...

2024-09-10 14:45:36
news-image

குலதெய்வ சாபத்தை நீக்குவதற்கான பிரத்தியேக வழிபாடு..?

2024-09-09 15:57:29
news-image

அதிர்ஷ்டம் ஏற்பட என்ன செய்ய வேண்டும்?

2024-09-04 18:11:19
news-image

செல்வ வரவை மேம்படுத்தும் எளிய பரிகாரங்கள்...!?

2024-09-03 15:08:38
news-image

ராகு தோஷ பரிகாரங்கள்..!?

2024-09-02 20:26:56
news-image

செல்வ வளம் குவிய மேற்கொள்ள வேண்டிய...

2024-08-31 18:51:29
news-image

2024 செப்டம்பர் மாத ராசி பலன்கள் 

2024-08-31 12:34:23
news-image

மாணவர்களின் கல்விப் புலமை மேம்படுத்துவதற்கான எளிய...

2024-08-30 15:49:59
news-image

நினைத்ததை நடத்திக் காட்டும் கையெழுத்து பரிகாரம்...!?

2024-08-28 17:12:21
news-image

தனம் சேருவதற்கான எளிய வழிமுறைகள்...! பரிகாரங்கள்..!?

2024-08-27 17:41:54
news-image

பண வரவு எம்முடைய வீட்டில் நிரந்தரமாக...

2024-08-26 17:26:34
news-image

குலதெய்வத்தின் பரிபூரண அருள் கிடைப்பதற்கான எளிய...

2024-08-24 15:55:33