(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

கிராமிய அபிவிருத்தி அமைச்சின் மூலமாக ஐ.தே.க.வினரின் வீட்டிற்கு மாத்திரமே மாடுகள் செல்வதாக தெரிவித்த ஜே.வி.பி. எம்.பி. நளிந்த ஜயதிஸ்ஸ, அது எவ்வாறு ஐ.தே.கட்சியினரின் வீட்டிற்கு செல்கிறது. சிறிகொத்தாவில் நேர்ந்துவிட்ட மாடுகளா என்றும் கேள்வி எழுப்பினார். 

பாராளுமன்றத்தில் இன்று வரவு–செலவு திட்டத்தின் கிராமிய அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு  தெரிவித்தார். 

அவர் மேலும்  உரையாற்றுகையில், 

கிராமிய அபிவிருத்தி அமைச்சின் மூலமாக பசு மாடுகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. எனினும் குறித்த மாடுகள் சிறிகொத்தாவில் நேர்ந்து விட்டதனை போன்று ஐ.தே. கட்சியினரின் வீட்டிற்கே செல்கிறது. அது ஏன் சிறிகொத்தாவில் பட்டியலிடப்பட்டதா? அவ்வாறாயின்  ஏன் ஐ.தே.க.வின் வீட்டிற்கே செல்கிறது என கேள்வி கேட்டார். 

 இதன்போது எழுந்து பதிலளித்த கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன், 

பால் உற்பத்திகளை மேம்படுத்தும் நோக்குடன் நாடுபூராகவும் பசுமாடுகள் பகிந்தளிக்கப்படுகின்றன. மாறாக, சிறிகொத்தாவில் பட்டியலிடப்படவில்லை. ஐ.தே.கட்சியினருக்கு மாத்திரம் பகிரவில்லை. நாடுபூராகவும் பகிரப்படுகிறது.