சுப்பர் ஸ்டார் 73

Published By: Digital Desk 2

12 Dec, 2022 | 11:15 AM
image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நடிப்பில் தயாராகி வரும் 'ஜெயிலர்' படத்தில் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் தோற்ற புகைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில ஆண்டுகளாக தன்னுடைய பிறந்த நாளை தனது வீட்டில் ரசிகர்களுடன் கொண்டாடி வருகிறார்.

அந்த வகையில் டிசம்பர் 12ஆம் திகதியான இன்று அவரது பிறந்த நாளை ரசிகர்களுடன் சென்னையில் கொண்டாடுகிறார். இந்நிலையில் அவர் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தயாராகி வரும் 'ஜெயிலர்' எனும் திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.

சுப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்களின் பிறந்தநாள் பரிசாக படக்குழுவினர், 'ஜெயிலர்' படத்தில் நடித்து வரும் முத்துவேல் பாண்டியன் எனும் அவருடைய கதாபாத்திரத்தின் தோற்றத்தை இன்று மாலை ஆறு மணி அளவில் வெளியிடுகிறார்கள்.

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'பாபா' திரைப்படம் தற்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.

இதற்கு ரசிகர்கள் பேராதரவளித்து வரும் நிலையில், அவர் நடித்து வரும் 'ஜெயிலர்' திரைப்படத்தின் புதிய அப்டேட் போஸ்டருக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்