அம்பாறை பிபிலையில் இருந்து மகாஓயாவிற்கு 5 கஜமுத்துக்களை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்ற 3 பேரை கைது செய்துள்ளதாக மகாஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து சம்பவதினமான நேற்று (11) மாலை மகாஓயா இலங்கை வங்கிக்கு அருகில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன்போது, பிபிலையில் இருந்து கஜமுத்துக்களை வியாபாரத்துக்காக மகாஓயாவிற்கு கடத்தி சென்ற முச்சக்கரவண்டியை கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விசேட அதிரடிப்படையினர் இடைமறித்து சோதனையிட்டபோது அதில் 5 கஜமுத்துக்களுடன் 3 பேரை கைது செய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் பிபிலையைச் சேர்ந்த 53,34 மற்றும் 36 வயதுடையவர்களாவர்.
மீட்கப்பட்ட கஜமுத்துக்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய முச்சக்கரவண்டி ஆகியன மகாஓயா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM