தமிழ் திரையுலகில் நடிகராக மட்டுமல்லாமல் மிதிவண்டி பந்தய வீரராகவும் அறியப்படும் நடிகர் ஆர்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை இயக்குநரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
'குட்டி புலி', 'கொம்பன்', 'மருது', 'கொடிவீரன்', 'தேவராட்டம்', 'புலிக்குத்தி பாண்டி', 'விருமன்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் எம். முத்தையா இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்'.
இதில் ஆர்யா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'வெந்து தணிந்தது காடு' படப் புகழ் நடிகை சித்தி இத்னானி நடிக்கிறார்.
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கிராம பின்னணியிலான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது.
ராமநாதபுரம் கதைக்கள பின்னணியில் உறவுகளுக்கும், உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் அளித்து தயாராகும் இந்த திரைப்படத்தில் இயக்குநர் முத்தையாவின் வழக்கமான பாணி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் ஆர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் ஆர்யாவின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM