லிந்துலை தங்ககலை தோட்டத்தில் உள்ள 500ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 

தோட்ட நிர்வாகம் தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்திற்கு அரை நாள் சம்பளம் வழங்குவதாகவும், கடந்த காலங்களில் 18 கிலோவிற்கு குறைவாக கொழுந்து பறித்த போது முழு நாள் சம்பவம் வழங்கியதாகவும், கூட்டு ஒப்பந்தம் முடிந்த பின்பு குறைந்த கிலோ கொழுந்து பறிக்கும் போது முழு நாள் சம்பளம் வழங்க முடியாது என நிர்வாகம் அறிவித்ததையடுத்து, இத்தோட்ட தொழிலாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்டத்தின் தொழிற்சாலைக்கு முன்னால் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 

இவ்வார்ப்பாட்டம் சுமார் 2 மணித்தியாலயங்கள் இடம்பெற்றன. 

அத்தோடு நேற்றையதினம் தோட்ட தொழிலாளர்களுக்கு மாதாந்தம் சம்பளம் வழங்குவதற்கான சம்பள விபர சீட்டு வழங்கப்பட்டுள்ளது. 

இந்த சீட்டில் 18 கிலோவிற்கு குறைவாக கொழுந்து பறித்த தொழிலாளர்களுக்கு அரைநாள் சம்பளம் கணக்கில் வழங்கப்பட்டிருப்பதை அறிந்த தோட்ட தொழிலாளர்கள், உடனடியாக முழு சம்பளத்தை வழங்க வேண்டும் எனவும் வழங்காத பட்சத்தில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட போவதாகவும் தெரிவித்தனர்