வவுனியாவில் கட்டாக்காலி மாடுகள் நகரசபையால் பிடிப்பு

Published By: Vishnu

11 Dec, 2022 | 03:05 PM
image

வவுனியா நகரில் வீதிகளில் கைவிடப்பட்ட கால்நடைகள் இன்று (11) காலை நகரசபை ஊழியர்கள், பொலிசார் இணைந்து பிடித்து நகரசபையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

உரியவர்கள் கால்நடைகளின் அடையாளங்களை உறுதிப்படுத்தி அவற்றை பெற்றுக்கொள்ளவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரில் வீதிகளில் கைவிடப்பட்ட கால் நடைகளினால் அதிகளவு விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது வீதி விபத்துக்களில் அதிகமான விபத்துக்கள் கைவிடப்பட்ட கால் நடைகளினால் ஏற்படுகின்றது  எனவே இதனைக் கட்டுப்படுத்த பொலிசார் நகரசபை ஊழியர்கள் இணைந்து மேற்கொள்வதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இன்று (11) அதிகாலை நகரசபை பொது சுகாதார பரிசோதகர் இலங்கேஸ்வரன் தலைமையில் சென்ற நகரசபை ஊழியர்கள் பொலிசாருடன் இணைந்து மூன்றுமுறிப்பு, மன்னார் வீதி, பூந்தோட்டம், ஹொறவப்பொத்தான ஆகிய நகரசபை எல்லைக்குட்பட்ட வீதிகளில் கைவிடப்பட்ட நிலையில் வீதிகளில் காணப்பட்ட சுமார் எண்பதிற்கும் மேற்பட்ட கட்டாக்காலி கால்நடைகள் கைப்பற்றப்பட்டு நகரசபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கால்நடைகளின் உரிமையாளர்கள் அவற்றின் அடையாளங்களை உறுதிப்படுத்தி தண்டப்பணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளவும் அவ்வாறு பெற்றுக்கொள்ளத் தவறினால் அவற்றை ஏல விற்பனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-14 06:08:27
news-image

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் சஜித் நேர்மறையான...

2025-02-14 01:57:12
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள்...

2025-02-14 01:53:03
news-image

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி...

2025-02-14 01:48:10
news-image

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்...

2025-02-14 01:40:11
news-image

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை...

2025-02-14 01:26:50
news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21