வடக்கு கிழக்கில் யுத்தப் பாதிப்பிற்குள்ளாகி வாழும் மக்களுக்கு குடியிருப்பதற்கு வீடுகள் இல்லாத நிலையிலேயே வாழுகின்றனர். தற்போது அரசியல் எதிர்ப்பிற்குள்ளாகியுள்ள இராணுவ வீட்டுத்திட்டங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளுவார்கள். அவர்களுக்கு வீட்டு வசதிகளை பெற்றுக்கொள்ளுவதற்கான தேவைகள் அதிகமாகவே காணப்படுகின்றது என பாதுகாப்பு செயலாளர் கருனாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

யுத்ததினால் பாதிக்கப்பட்ட பூநகரி கிராமத்திற்கு அபிவிருத்தி திட்ட பணிகளை முன்னெடுத்திருக்கும் அபே லங்கா நிறுவனத்தின் இணையத்தள் அங்குரார்ப்பன நிகழ்வில் பங்குபற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.