பசறை, மாப்பாகலையில் 'சொட்கன்' என்று கூறப்படும் துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்களுடன் நபரொருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (டிச. 11) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஆக்கரத்தனை விசேட அதிரடி பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, அப்பொலிஸ் பிரிவினர் குறிப்பிட்ட இடத்தை சுற்றிவளைத்துள்ளனர்.
அதனையடுத்து அங்கு மிகவும் சூட்சுமமான முறையில் மறைந்து வைக்கப்பட்டிருந்த 'சொட்கன்' என்று கூறப்படும் துப்பாக்கியையும், அதற்கு பயன்படுத்தப்படும் 6 தோட்டாக்களையும் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபர் விசேட அதிரடிப்படையினரால் பசறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தீவிர விசாரணை இடம்பெற்று வருவதாகவும், விசாரணைகள் நிறைவுற்ற பின்னர் சந்தேக நபர் பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM