கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்த சந்தேக நபர் ஒருவரை கிளிநொச்சி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் நேற்று (டிச. 10) கைதுசெய்துள்ளனர்.
இதன்போது கடந்த மாதம் 16ஆம் திகதி திருடப்பட்டதாக கூறப்படும் மோட்டார் சைக்கிளொன்றையும் சந்தேக நபரிடமிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,
அண்மைய நாட்களாக கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் மோட்டார் சைக்கிள்கள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
இந்நிலையில் கடந்த மாதம் 16ஆம் திகதி அலுவலக விடுதியொன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பெண்களுக்கான மோட்டார் சைக்கிளொன்று திருடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் கிளிநொச்சி இரணைமடுவில் உள்ள கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே, நேற்றைய தினம் வீடொன்றினுள் மறைத்து வைத்திருந்த குறித்த மோட்டார் சைக்கிளோடு சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர்.
இதேவேளை குறித்த சந்தேக நபரையும் சான்றுப் பொருளையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM