குழந்தைகள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு குழந்தை நல மருத்துவர் விடுத்துள்ள கோரிக்கை

Published By: Vishnu

11 Dec, 2022 | 02:38 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

கடும் காற்று மற்றும் குளிருடனான காலநிலை காரணமாக குழந்தைகள் இலகுவாக நோய்கள் தாக்குவதாகவும் இதன் விளைவாக கடும் குளிரில் இருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர்  தீபால் பெரேரா கோரியுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

காற்று மற்றும் குளிருடான காலநிலை காரணமாக குழந்தைகளுக்கு பல நோய்கள் ஏற்படக்கூடும்.  மேலும் கடும் குளிரில் இருந்து குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு காய்ச்சல் குறிப்பாக குளிர்ச்சியுடன் அதிகரிக்கும். எனவே இந்த நாட்களில் குழந்தைகளை வெளியில் அழைத்துச் சென்றால் பாதுகாப்பான உடை , தொப்பிகளை அணிந்து காலுறைகளை அணிந்து அழைத்து செல்ல வேண்டும்.

மேலும் காற்று மாசடைவு காரணமாக வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்லவேண்டும்  . 

காற்று மாசடைவு எடை குறைந்த குழந்தைகளுக்கு உகந்ததல்ல. அவர்களின் உடல் வெப்பநிலை குறைந்து அவர்கள் இலகுவில் நோய்வாய் படலாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல கடற்பகுதிகளுக்கு 'சிவப்பு' மட்ட எச்சரிக்கை!

2026-08-08 11:22:51
news-image

மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துவது...

2026-08-08 11:24:38
news-image

பிரகீத் எக்னெலிகொட வழக்கு: விசேட மூவர்...

2026-08-08 10:56:46
news-image

பரவிபாஞ்சான் பாலத்தை புனரமைக்குமாறு கோரி மக்கள்...

2026-08-08 10:53:50
news-image

யாழில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாவிகளை இலக்காக...

2026-08-08 10:39:40
news-image

சிறைச்சாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைந்த...

2026-08-08 10:34:00
news-image

புளியங்குளம் பகுதியில் வாகன விபத்து: இளைஞர்...

2026-08-08 09:57:10
news-image

நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை:...

2026-08-08 09:54:46
news-image

இந்தியா–இலங்கை ஆடை வர்த்தக மாநாடு!

2026-08-08 09:47:56
news-image

மெகசின் சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதி...

2026-08-08 09:19:59
news-image

வத்தளை பிறந்தநாள் விழா துப்பாக்கிச்சூடு: துப்பாக்கிதாரி...

2026-08-08 09:17:29
news-image

இன்றைய வானிலை 

2026-08-08 06:16:04